குடியாத்தம் நகராட்சி ஊழியர்களுக்கு வேட்டி சேலை மற்றும் இனிப்பு வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்த குடியாத்தம் துணை நகர மன்ற தலைவர்

0
280
  1. வேலூர் மாவட்டம் குடியாத்தம், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகை பொங்கல் திருநாள். உழவு தொழிலில் அறுவடை முடிந்து அந்த நெல்லில் அரிசி எடுத்து அதில் பொங்கல் வைத்து சாமிக்கு படைக்கும் இந்த திருநாள் தமிழ் மக்களின் உணர்வுகளில் கலந்த ஒன்று. இத்தகைய திருநாள் பொங்கல் நாளில் குடியாத்தம் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி குடியாத்தம் நகராட்சியில் 24 வது வார்டில் உள்ள நகராட்சி ஊழியர்களுக்கு வேட்டி சேலை மற்றும் இனிப்புகளை வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டர்குடியாத்தம் நிருபர் சுவேதா S.கார்த்திகேயன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here