சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து
இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 2 பயணிகள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களை தனியாக அழைத்து விசாரணை செய்தனர். அப்போது ஒருவர் அவரது உள்ளாடைக்குள் 856 கிராம் தங்கச் செயினை மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதேபோல் மற்றொரு பயணி தான் கொண்டுவந்த டிசர்ட்டின் காலரில் 330 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிந்தது. இதையடுத்து மொத்தம் சுமார் 1கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். தங்கம் கடத்தி வந்த 2 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.














