குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பள்ளி மாணவியை சீரழித்த இளைஞர் கைது:

0
375

சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் வசித்து வருபவர்கண்ணன் என்பவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகிறார். இருவரும் வேலைக்கு சென்று வரும் நிலையில் நேற்று மாலை 11ம்
வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியான தனது மகள் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததை தொடர்ந்து தனது
மகளிடம் தந்தை கண்ணன் விசாரித்த போது
சிறுமி
கடந்த இரண்டுமாதங்களுக்கு முன்பு வீட்டின் அருகில் வசிக்கும் டிரைவர்
ராகவா ராஜா என்பவர் தனக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்
இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்ததாவும் அதனை கலைப்பதற்காக மெடிக்கலில் அவரே மாத்திரை வாங்கி கொடுத்ததாகவும் அதனால் தற்பொழுது வயிற்று வழியால் துடித்துக் கொண்டிருப்பதாகவும் கண்ணீர் மல்க தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கண்ணன் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் ராகவா ராஜாவை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.. ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here