சென்னை காசிமேடு மீன் விற்பனை கூடம் அருகே சென்னை மீன்பிடி தொழிலாளர் சிஐடியு சங்கத்தின் சார்பாக மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது தற்போது புதிதாக நடைமுறைப்படுத்தப் இருக்கும் தேசிய கடல் மீன்வள கொள்கை சட்டத்தை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அப்பொழுது பேசிய சிஐடியு வின் தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் அந்தோணி கூறுகையில் வருகின்ற 19ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற இருப்பதாகவும் இதில்
குறிப்பாக தேசிய கடல் மீன்வள கொள்கை 2021 என்ற கொள்கையை உருவாக்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இந்த சட்டத்தில் பாரம்பரிய மீனவர்கள் கடலில் இருந்தும் கடற்கரை பகுதிகளில் இருந்தும் வாழ்வாதாரத்தை அழித்து விடும் சட்டமாக இது உள்ளது
மீனவர்கள் கடலுக்குள் 200 நாட்டிக்கல் மைல்களுக்கு மேல் சென்று மீன் பிடிக்கச் சென்றால் அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் மேலும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருப்பதாக கூறியவர் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆராய்ச்சி என்ற பெயரில் கடலுக்குள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு அனுமதி அளிக்க படுவதாகவும் கூறினார் மேலும்
மீனவர்கள் எந்த படகில் மீன் பிடிக்க செல்கிறார்கள் எந்த கடலில் சென்று மீன் பிடிக்க செல்கிறார்கள் என்பதை கூறி அதற்குரிய கட்டணத்தை தினசரியும் செலுத்திய பிறகே கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று சட்டத்தில் கூறப்பட்டு இருப்பதாகவும் இச்சட்டம் மீனவர்களின் விரோதமாக இருப்பதாகவும் கூறினார்
ஆகவே இச்சட்டத்தை அறிமுகப்படுத்த கூடிய நேரத்திலேயே தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து மீனவர்களும் மீன்பிடி தொழிலாளர்கள் அமைப்புகளும் ஒன்றாக சேர்ந்து காசிமேட்டில் முதல் கட்டமாக தங்களது எதிர்ப்பை கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலமாக தெரிவித்ததாகவும் அவர் கூறினார்
Home Uncategorized காசிமேட்டில் மீனவர்களுக்கு எதிரான தேசிய கடல் மீன் வள கொள்கை 2021 சட்டத்தை கைவிடக்கோரி மீனவர்கள்...














