ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கிருஷ்ணபட்டினம் கிராமத்திலே மீண்டும் போதி தர்மர் அவதாரம்!

0
459

ஆந்திரா நெல்லூர் மாவட்டத்தில் கிருஷ்ணாபட்டினம் கிராமத்தில் மூலிகை வைத்தியர் ஆக உள்ளார் பொனிகி ஆனந்தையா என்பவர்.இவர் நாட்டு வைத்தியராக இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாகவே மக்களுக்கு வைத்தியம் செய்து வந்துள்ளார்.இவர் கொரோணா காலகட்டத்தில் மக்கள் மரணங்கள் அதிகரித்ததன் விளைவாக மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான ஒரு நாட்டு மூலிகை மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று நீண்ட நெடிய போராட்டம் நடத்தி ஒருவழியாக லேகியம் மருந்து கண்டுபிடித்தார்.ஆரம்பத்தில் அங்கு உள்ள சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு அதை இலவசமாக வழங்கி பலரைக் குணப்படுத்தி வந்தார்.கொரோணா பாசிட்டிவ் இருந்தவர்களும் அவரை நோக்கி படையெடுத்தனர்.பாசிட்டிவ் வந்தவர்களையும் அவர் காப்பாற்றி ஓரிரு தினங்களில் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.இந்த தகவல்கள் ஆந்திரா முழுவதும் காட்டு தீ போல் பரவியது அதை பயன்படுத்திய பல கொரோணா நோயாளிகள் நாங்கள் முற்றிலும் குணமடைந்து விட்டோம், எங்களுக்கு கொரோணா பாசிட்டிவ் வந்தது, நாங்கள் பணம் செலவழிக்க முடியாத ஏழைகள் வேறு வழியில்லாமல் அவரை நோக்கிச் சென்றோம் அங்கே மூச்சு திணறலுடன் கடுமையான போராட்டத்தில் இருந்த எங்கள் உறவினர்கள் அடுத்த அரை மணி நேரத்தில் எல்லாம் சுவாசப் பிரச்சினை நீங்கி எழுந்து அமரும் சூழ்நிலை உருவானது மற்றும் ஒரே ஒருநாள் வழங்கப்பட்ட அந்த லேகியத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்பினோம் என்று நிறைய அறிக்கைகள் வெளியே வர ஆரம்பித்தன.மக்கள் அங்கே கூட்டம் கூட்டமாக மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று மூலிகை மருந்து வாங்கும் நிலைமை உருவானது.ஆரம்பத்தில் சிறிதளவு தயார்செய்து சுற்று வட்டார மக்களுக்கு வழங்கிய பொனிகி ஆனந்தையாவுக்கு இப்படிப்பட்ட ஒரு பெரும் கூட்டம் வருவது அவரை திக்குமுக்காட வைத்தது காரணம் அதற்கான மூலிகை பொருட்கள் கிடைப்பது சற்று கடினம் தேடி அலைய வேண்டும்.அதற்கான திட்டங்கள் ஆரம்பத்தில் தயார்நிலையில் இல்லை.ஆனால் மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள் இவர்களை தடுத்து நிறுத்தவும் முடியாத சூழ்நிலை.பாசிட்டிவ் வந்தவர்களும் வருகிறார்கள்.பாசிட்டிவ் இல்லாதவர்களும் வருகிறார்கள் அனைவரையும் மரியாதையாக அன்புடன் நடத்தி அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் திணறித்தான் போனார்.ஒரு கட்டத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி கவனத்திற்கு இந்த விஷயம் சென்றது.ஆந்திரா சுகாதாரத்துறை அமைப்பும் மற்றும் AYUSH எனும் மத்திய சுகாதாரத் துறை அமைப்புகளும் இதில் கவனம் செலுத்த ஆரம்பித்தன.தினமும் மக்கள் 2,000 முதல் 5000 பேர் என்று கூட்டம் கூடுவது கொரோணா காலகட்டத்தில் பாதுகாப்பு அம்சங்களை மீறும் செயல்.அந்த மருந்தின் தன்மை என்னவென்று தெரியவில்லை.அதை எப்படி ஏற்றுக்கொள்வது. மக்களை எப்படி தடுத்து நிறுத்துவது என்று புரியாமல் ஆந்திர அரசே திணறித்தான் போனது.அதற்காக அரசு 5-பேர் குழுவை அமைத்து அங்கே சென்று ஆனந்தையா மருந்தின் உண்மை தன்மை பற்றி ஆராய வேண்டுகோள் விடுத்தது.அதுவரை கொரோணா மூலிகை மருந்து வழங்குவதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.உத்தரவிட்ட பிறகும் கிருஷ்ணப்பட்டினத்தை நோக்கி மக்கள் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.ஆம்புலன்ஸ்கள் கொரோணா நோயாளிகளுடன் வரிசை கட்டி நின்றன.அவர்களை தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலை சமூக இடைவெளி இல்லை மேலும் அதிகம் பரவி விடும் என்ற அச்சம் காரணத்தினால் தடை உத்தரவு போடப்பட்டது. அந்த நேரத்தில் ஆந்திரா சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் சந்திரமோகன் அந்த இடத்தில் இருந்தார்.அந்த இடத்தில் ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்ட கொரோணா நோயாளிகளுக்கு அவசர நிமித்தம் காரணமாக வேறு வழி இல்லாமல் மருந்துகள் தரப்பட்டன.கண்ணில் சொட்டு மருந்து விடப்பட்டது மூச்சுத்திணறி கடைசி கட்டத்தில் இருந்த அந்த நபர் ஒரு பத்து நிமிடங்களில் எழுந்து அமர்கிறார்.அதன்பிறகு லேகியத்தை சாப்பிட்டு மறுநாள் உடல் நலம் பெற்று தன் இல்லம் நோக்கி சென்று விட்டார்.அந்த இடத்தில் இருந்த சந்திரமோகன் முன்னாள் ஆந்திர அமைச்சர் அரசுக்கு பகிரங்க கோரிக்கை வைத்தார் இந்த மருந்து கண்கூடாக செயல்படுகிறது.பல்வேறு சாட்சிகள் இருக்கிறது நானும் சாட்சி தான் தயவுசெய்து ஆந்திர அரசு இந்த தடையை நீக்க வேண்டும். நீக்கி அதற்கான அனுமதி உத்தரவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.அதேநேரம் ஆந்திரா வைத்தியர் பொனிகி ஆனந்தையா அவர்கள் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.என்னை நம்பி என்னை நோக்கி மக்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள்.மூலிகை மருந்து செயல்படுகிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.மருந்து முற்றிலும் மூலிகை மருந்து எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை ஆகவே இந்த மருந்தை அனுமதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.இத்தனை ஆயிரம் பேர் பயன் பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லும்போது அதன் உண்மை தன்மை பற்றி ஏன் ஆராயாமல் காலதாமதம் செய்கிறீர்கள்,உடனடியாக ஆராய்ந்து மருந்தின் தன்மை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.மத்திய சுகாதார அமைப்பு AYUSH களமிறங்கியது.அது கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது.இந்த மருந்து எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை இதை ஏற்றுக் கொள்ளலாம் என்று அறிக்கை தாக்கல் செய்தது AYUSH.உடனடியாக ஆந்திர அரசும் இதில் பல்வேறு கூடுதல் நன்மைகள் கருதி ஆனந்தையாவின் மூலிகை மருந்தை ஆந்திரா அரசு அங்கீகாரம் செய்கிறது என உத்தரவிட்டது. ஆனால் கண்ணில் விடும் பச்சை நிற சொட்டு மருந்து மட்டும் தடை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.மருந்தின் தன்மையை ஆராயந்து T-L-F என்ற மூன்று வகையான மூலிகை மருந்துகளுக்கு ஆந்திரா அரசும் அனுமதி வழங்கியது.மக்கள் உயிர் காக்க கோர்ட்டுக்கு சென்று வெற்றி பெற்றார் ஆனந்தையா.
இப்படிப்பட்ட மருந்து வழங்குவது மற்றும் கோர்ட்டின் அதிரடி சாதக உத்தரவு இவருடைய வெற்றி அனைத்தும் மேலும் மேலும் இவருக்கு பலம் சேர்த்தது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து மருந்து வாங்கிச் சென்றிருக்கிறார்கள்.தினமும் அதிக அளவில் மக்கள் குவிந்து கொண்டே இருப்பதால் கிருஷ்ணப்பட்டினத்தில் கூட்டம் அதிகரிப்பதால் விதிமுறைகளுக்கு முரணானது என்பதாலும் அந்த இடத்தில் மருந்து வழங்க ஆந்திர அரசு தற்போது தடை விதித்துள்ளது.ஆகவே தற்போது மக்களுக்கு தெரியாமல் ரகசியமாக தயாரித்து மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.ஓரே இடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அடுத்து கிருஷ்ண பட்டினத்தில் மருந்து வழங்குவது நிறுத்தப்பட்டு பல்வேறு இடங்களில் ரகசியமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆட்களை வைத்து இந்த மூலிகை மருந்து தயாரிக்கப்படுகிறது.இந்த மருந்து தயாரிக்கும் பணி என்பது மிக கடினமான பணி கிட்டத்தட்ட 20 வகையான மூலிகைகள் கிடைக்க வேண்டும் அதைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் அப்படிப்பட்ட பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் இந்த வாழும் போதிதர்மர் பொனிகி ஆனந்தையா.இவர் பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்.எப்படி இவர் இலவசமாக வழங்குகிறார் என்று பல்வேறு கேள்விகள் எழும்.அவர் BONIGI ANANDAIAH SEVA TRUST 2013-ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.அவருக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மருந்து சாப்பிட்டு உயிர் காப்பாற்றிக் கொண்டு பயன் பெற்ற நோயாளிகளும் என்றும் பல்வேறு தரப்புகளில் இருந்து அவருக்கு நிதி உதவிகள் வந்தவண்ணம் உள்ளன.மருந்து வாங்கிச்சென்றவர்கள் கூட நாம் தனியார் மருத்துவமனை சென்று விட்டால் நாம் இத்தனை லட்சங்கள் செலவு செய்ய வேண்டுமே இந்த மாமனிதரின் செயலுக்கு நிதி வழங்குவதில் தவறில்லை என்று நிதிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.அந்த நிதியிலிருந்து தான் இவர் செலவழித்து கொண்டிருக்கிறார்.பார்ப்பதற்கு மிக மிக எளிமையான இந்த நல்ல மனிதர் இப்படிப்பட்ட மனிதர்கள் நமக்கு இல்லையே என்று தமிழக மக்கள் பலரும் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள்.இந்த மூலிகை மருத்துவரை ஆந்திரா அரசு அங்கீகரித்துள்ளது.அவரை ஏன் தமிழகம் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற கேள்வி எழுந்துள்ளது ?.
அதற்கும் ஆனந்தையாவிடம் கேள்வி கேட்டபோது அவர் பதில் அளித்தார். தமிழகத்திற்கும் நான் சேவை செய்ய விரும்புகிறேன் நான் படித்தது தமிழகத்தில் தமிழக மக்கள் எனக்கு பிடிக்கும்.ஆனால் தற்சமயம் மூலிகை கிடைப்பதே பெரும்பாடாக உள்ளது.அதே சமயம் அதை தயார்படுத்தும் பணி எனது நேரடி கண்காணிப்பில் இருப்பதால் பல்வேறு சிக்கல்கள் கால தாமதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.ஆகவே சிறிது காலம் சென்றதும் அதற்கான ஏற்பாடுகள் செய்து அதே மருந்தை தமிழக மக்களுக்கு வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன் மேலும் அதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கினால் மட்டுமே முடியும் என்றார்.ஆந்திராவில் அரசு ஏற்றுக் கொண்டாலும் தமிழக அரசும் அதை மருந்தாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே இயலும் அது காலத்தின் கையில் உள்ளது என்று சொல்லி முடித்தார்.இலட்சக்கணக்கானவர்கள் கையெடுத்து கும்பிடும் இப்படிப்பட்டவரை அவர் இடத்திலேயே சென்று நம்முடைய மாவட்ட நிருபர் K.S.திலீப்-பள்ளிப்பட்டு அவர்கள் சந்தித்தார்.ஆந்திரா மாநிலம் சென்று அவர் ரகசியமாக பொதுமக்கள் கூட்டம் கூடாத இடங்களில் வைத்து இரகசியமாக தயாரிக்கப்படும் அந்த மூலிகை தயாரிப்பு இடத்திற்கு சென்று அவரிடம் நேரடியாக பேட்டி எடுத்து அந்த இடத்தில் ஒரு நாள் முழுவதும் தங்கியிருந்து மருந்துகள் தயாரிக்கும் முறைகள் பற்றி அறிந்து அதன் உண்மைத்தன்மையை உத்திரவாதத்தை நமக்கு அளித்துள்ளார்.

தினமும் அவரை தமிழகத்தை சேர்ந்த பகுதிகளில் இருந்தும் ஆந்திரா முழுவதும் இருந்தும் விஐபிகள் சந்தித்த வண்ணம் உள்ளனர்.அமைச்சர்கள்,மிகப்பெரிய உயர் அதிகாரிகள் மற்றும் பல மருத்துவர்கள் கூட அவருடன் நேரடியாக வந்து விசாரித்து வருகின்றனர்.மிகவும் அதிவேகத்தில் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் முனிகி ஆனந்தையா அவர்கள்.இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை வாழ்த்துவோம்.இவர்கள் நீண்ட காலம் வாழ இறைவனிடம் பிரார்த்திப்போம்.இவருடைய சேவையை தமிழ்நாடு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.இன்றைய காலகட்டங்களில் பல லட்சங்களை செலவு செய்து காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் சுலபமாக மக்கள் உயிர் காப்பாற்றி தரும் இவர் ஒரு போதிதர்மர் என்றால் மிகையாகாது.நடமாடும் தெய்வம் என்றால் மிகையாகாது.அவர் இருக்கும் திசை நோக்கி இருகரம் கூப்பி வணங்குவோம்.அவரை சந்திப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.இந்த சூழ்நிலையில் அவருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு அவருடன் பேசி ஒரு நாள் முழுவதும் இருந்து அவருடைய அன்பை பெற்று அவருடைய ஆசிகளைப் பெற்று வந்துள்ளார் நமது மாவட்ட நிருபர் பள்ளிப்பட்டு-K.S. திலீப் அவர்கள்.
சமூக அக்கறையுள்ள உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள் ஆனந்தையாவின் டிரஸ்டுக்கு உதவி செய்ய வேண்டுகிறோம்.

K.S.திலீப்-பள்ளிப்பட்டு
திருவள்ளூர் மாவட்ட நிருபர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here