வேலூர் மாவட்டம் குடியாத்தம் 4 வருடங்களாக ஆதிமுக ஆட்சியில் குடிநீர் இன்றி தவிக்கும் கிராம மக்கள் கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்;

0
442

வேலூர் மாவட்டம் குடியாத்தம்

4 வருடங்களாக ஆதிமுக ஆட்சியில் குடிநீர் இன்றி தவிக்கும் கிராம மக்கள் கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்

குடியாத்தம் அடுத்த அரிகிவாரிபள்ளி கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் இந்த நிலையில் குடிநீருக்காக கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கபட்டு 3 நீர்தேக்க தோட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் கிராம மக்கள் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த 4 வருடத்திற்கு முன்னால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றியது இதனால் கிராமத்தில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து தர அரசு அதிகாரிகளிடம் 4 வருடங்களாக கோரிக்கை மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை என்று வேதனையுடன் கூறுகின்றனர் கிராம மக்கள் கடந்த 4 வருடங்களாக குடி தண்ணீர் எடுக்க அருகில் உள்ள தனியார் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் தான் குடி தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர் மேலும் சில நேரங்களில் நிலத்தின் உரிமையாளர்கள் தண்ணீர் எடுக்க அனுமதிப்பதில்லை இதனால் குடிநீர் இன்று மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் கிராமத்தில் உள்ள வசதி படைத்தவர்கள் குடிநீரை விலைக்கி வாங்கி பயன்படுத்துகிறார்கள் ஆனால் கூலி தொழிலாளர் தாழ்த்தப்பட்ட மக்கள் என்ன செய்வது தெரியாமல் தவித்து வருகின்றனர் கொரோனா காலம் மக்கள் வேலை இன்றி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து hநிலையில் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் தவிக்கும் கிராம மக்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் மேலும் நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here