வேகமெடுக்கும் கொரோனா – ஒரே நாளில் 36,000 பேருக்கு பாதிப்பு;

0
361

கொரோனா வைரஸ் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் 7 கோடியைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியுள்ளது. 17 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 6-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஒரே நாளில் 36 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்து 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது

கொரோனா வைரஸ் காரணமாக அங்கு 691 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 68 ஆயிரத்து 307 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here