சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அகில இந்திய மீனவர் சங்கத்தின் சார்பில் கனிவான கவனத்திற்கு ;

0
229

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு

அகில இந்திய மீனவர் சங்கத்தின் சார்பில் கனிவான கவனத்திற்கு அன்புடன் கோரிக்கை!
தேசிய செயல் தலைவரும் & தேசிய செய்தி தொடர்பாளருமான

டாக்டர் நாஞ்சில் P.ரவி அவர்கள். விடுத்துள்ள கோரிக்கையில்,

கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள மீனவ சமுதாய மக்களும், அனைத்து சமூக மக்களும் பயன் பெறும் விதமாக 3 தொகுதி மக்களுக்கும் பஸ் வசதி செய்து தர நீண்ட நாள் கோரிக்கை,

மாண்புமிகு இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி அவர்களுக்கும்.

மாண்புமிகு ஆர்.கே.நகர் சட்டமன்ற J.J.எபினேசர் அவர்களுக்கும்.

திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் அவர்களுக்கும்,

பஸ் வசதி இல்லாத வழி தடத்தில் புதிய பேருந்துகளை இயக்கி உங்கள் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறை வேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

திருவெற்றியூரில் இருந்து கோவளம் வரை கிழக்கு கடற்கரையில் உள்ள மீனவர்களும் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் விதமாக.

திருவெற்றியூர், தேரடி, டோல்கேட், N.4 காவல் நிலையம், காசிமேடு, கல்மண்டபம், இராயபுரம், பீச் ரயில் நிலையம், பாரிமுனை , தலைமை செயலகம், மெரினா, கண்ணகி சிலை , அயோத்தி குப்பம் , நடுக்குப்பம் ,நொச்சிகுப்பம் , பட்டினம்பாக்கம், M.R.C.நகர், சத்யா ஸ்டூடியோ, மலர் ஆஸ்பத்திரி ,ஊரூர் குப்பம் , ஓடை குப்பம் , (பெசன் நகர் வேளாங்கண்ணி ஆலயம் ) அடையார் டிப்போ, ஜெயந்தி, திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், சின்ன நீலாங்கரை, பெரிய நீலாங்கரை, வெட்டுவாங்கேணி,பெத்தேல் நகர் , ஈஞ்சம்பாக்கம், அக்கரை, பனையூர் குப்பம், நைனார் குப்பம் , உத்தாண்டி, ஆகாஷ், காணாத்தூர், M.G.M , முட்டுக்காடு, மஞ்ச கோடு, போட் ஹவுஸ், ஆலம்பாறை, கோவளம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக 3 பேருந்துக்களும் மறு மார்கத்தில் இது போன்று 3 பேருந்துக்களையும் இயக்கி இந்த பகுதியில் உள்ள மக்களின் பஸ் கோரிக்கை நிறை வேற்றி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

*அகில இந்திய மீனவர் சங்கம். (NUF)*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here