கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரங்களை இழந்து பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
சென்னை காசிமேட்டில் சென்னை உணவு வங்கி அமைப்பு சார்பில் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த வடசென்னை பகுதிகளில் வசித்து வரும் 150 திருநங்கைகளுக்கு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கினார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் நிறுவனத்தின் தலைவர் சந்தீப்
கடந்த 29 வருடங்களாக பேரிடர் காலத்தில் உதவிகளை செய்து வருகிறோம் தற்போது 150 திருநங்கைகளுக்கு உதவி செய்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது மேலும் தேவைப்பட்டால் உதவி செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.
பின்னர் பேசிய மலைக்கா ( திருநங்கை)
திருநங்கைகளுக்கு உதவிகள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது ஒன்று அல்லது இரண்டு தொண்டு நிறுவனங்கள்தான் உதவிகள் செய்ய முன் வருகின்றனர் இதனால் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்














