புகைப்பட கலைஞர்கள் & வீடியோ ஒளிப்பதிவாளர்கள் கொரானா ஊரடங்கு உத்தரவு சூழ்நிலையால் (2020/ 2021) கிட்டத்தட்ட 18 மாதங்களாக ஒளிப்பதிவு துறையில் நமக்கு தொழில் செய்யும் வாய்ப்புகள் இன்றி வருமானம் இழந்து வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு பெரும் கடன் சுமையால் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம்
ஒளிப்பதிவு துறை ஒன்றை மட்டுமே முழுவதும் நம்பி வாழ்வாதாரமாக வாழும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை அரசு காக்க வேண்டும்
தற்பொழுது அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு தளர்வு லிஸ்டில் அரசு அலுவலகங்கள், பத்திர பதிவு அலுவலகங்கள், வங்கிகள், ஓட்டுனர் உரிமை பெறும் அலுவலகங்கள் செயல்படலாம் ஆனால் இவைகள் அனைத்திற்கும் அத்தியாவசியத் தேவையான பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுப்பதற்கு நமது போட்டோ ஸ்டுடியோ கடைகள் எதுவும் செயல்பட அனுமதி இல்லை, இதனால் நாமும் நம் வாடிக்கையாளர்களும் பெறும் சிரமத்தில் இருக்கிறோம் இதை தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும்
போட்டோ ஸ்டுடியோ திறக்கலாமா திறக்க கூடாதா என்ற ஒரு தீர்வு கூட இதுவரை தமிழக அரசு மூலம் நமக்கு கிடைக்கவில்லை
இதை அரசு கவனத்திற்கு எடுத்து செல்லும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள நம் ஒளிப்பதிவு சொந்தங்கள் அனைவரும் அவர் அவர்கள் இல்லத்தில் இருந்தவாரே நமது கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கும் விதத்தில் ஒரு கையில் நம் ஒளிப்பட கருவி யுடனும் மறு கையில் தமிழக அரசே Savephotographers என்ற வாசகத்துடன் பதாகை ஏந்தி தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்,
அவரவர் இல்லத்திலிருந்து இருந்தே நம் கோரிக்கையுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளம் மற்றும் பத்திரிக்கை வாயிலாக அரசுக்கு நாம் அனைவரும் தெரியப்படுத்த வேண்டும்,
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக புகைப்பட துறை சார்ந்த நிறுவனங்கள் கடை பூட்டி இருப்பதினால் கம்ப்யூட்டர், பிரிண்டர், இன்வெர்ட்டர் ups உட்பட பல உபகரணங்கள் பழுதாகி கொண்டிருக்கிறது, அதுமட்டுமல்லாமல் ஸ்டுடியோ வாடகை, மின்சார கட்டணம், வங்கி கடன், தனியார் நிதிநிறுவன கடன் இவைகளின் நெருக்கடியிலிருந்து வீடியோ புகைப்பட கலைஞர்களை தமிழக முதல்வர் அவர்கள் காக்க வேண்டும்
நமது தாழ்மையான இந்த வேண்டுகோளை தமிழக முதல்வர் ஏற்க வேண்டும் என மிகத் தாழ்மையோடு கேட்டுக் கொள்கின்றோம்
















