மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற காய்கறி வியாபாரியை நாலு மணி நேரத்தில் பிடித்த போலீசாருக்கு பாராட்டு!

0
326

வண்ணாரப்பேட்டையில் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த காய்கறி வியாபாரி மூதாட்டியிடம் நாலரை சவரன் தங்கச்சங்கிலியை பறித்து போலீசாரிடம் பிடிபட்டார்

தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவைச் சேர்ந்தவர் வசந்தா வயது 68 என்ற மூதாட்டி கடையில் பொருட்கள் வாங்குவதற்காக ராமானுஜர் கூடம் என்ற தெருவில் உள்ள இரண்டு அடி அகலமுள்ள சந்து வழியாக வெளியே வந்துள்ளார் தண்டையார்ப்பேட்டை அம்மணி அம்மன் பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ரமேஷ் வயது 40 தெருவின் ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வசந்தாவை பின்தொடர்ந்து வந்து பேச்சுக் கொடுத்து வசந்தா கழுத்தில் அணிந்திருந்த 4.5 சவரன் தங்க சங்கிலியை கழுத்து வழியாக கழற்றிக் கொண்டு தப்பி ஓடினார்
மூதாட்டி திருடன் திருடன் என கத்தவே ரமேஷ் மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு மின்னல் வேகத்தில் தலைமறைவாகி விட்டார் இது தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் கொடுக்கப்பட்டது வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் உத்தரவின்பேரில் உதவி ஆணையர் ஆனந்தகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உள்ளார் அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளார்
அப்போது அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை சோதனையிட்டபோது மோட்டார் சைக்கிள் எண்ணை கொண்டு ஆர்சி புக்கில் உள்ள விலாசத்திற்கு போலீசார் சென்றனர் அவர் அங்கிருந்து வீடு மாறி இருப்பதாக தகவல் கிடைத்தது இதை அடுத்து குற்றப்பிரிவு ஆய்வாளர் தவமணி, உதவி ஆய்வாளர்கள் சங்கர் காதர் மீரான், தலைமை காவலர்கள் சரவணன்,அசோக், மணிகண்டன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது தனிப்படை போலீசார் வாகனத்தில் இருந்த முகவரியிலிருந்து அவர் வீடு மாறி இருப்பதை அறிந்து எம் சி ரோடுக்கு சென்றனர் அங்கும் அவர் இல்லை அவரது குடும்பத்தினரிடம் விசாரணை செய்தபோது அவர் ஏழுகிணறு பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்ததாகவும் தற்போது வியாபாரம் இல்லை என்பதால் இது போல் வழிப்பறியில் ஈடுபட்டதாக தெரியவந்தது
போலீசார் வீட்டில் வந்து விசாரணை செய்வதை அறிந்த ரமேஷ் தானாக வீட்டிற்கு வந்தார் போலீசார் அவரை கைது செய்து விசாரித்தபோது தவறு செய்துவிட்டேன் என்னை மன்னியுங்கள் கொரோனா காலத்தில் வறுமையால் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக தவறு செய்தேன் என கதறி அழுதார் என தொடர்ந்து ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் காவல்துறையினரின் மின்னல்வேக நடவடிக்கையால் நாலு மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த காவல்துறை அதிகாரிகளை துணை ஆணையர் சிவபிரசாத் பாராட்டினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here