புது வண்ணாரப்பேட்டையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி வழங்கினார்!

0
315

புது வண்ணாரப்பேட்டையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி வழங்கினார்
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 98 ஆவது பிறந்தநாளை புது வண்ணாரப்பேட்டையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் 40-வது வட்டத்தின் சார்பாக கொண்டாடினார் இதில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி கலந்துகொண்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் கொடியை ஏற்றி கலைஞரின் திரு உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் பின்னர் அப்பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண தொகையை வழங்கினார் மேலும் துப்புரவு தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினார் பின்னர் அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மதியவேளை உணவை சத்தான முட்டையுடன் வழங்கினார் இதற்கான ஏற்பாடுகளை நாற்பதாவது வட்ட பொறுப்பாளர் மணிகண்டன் செய்திருந்தார்
இதில் ஆர்கே நகர் தொகுதி கிழக்கு பொறுப்பாளர் சுந்தர்ராஜன் வடசென்னை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் புத்தன் மற்றும் 40 ஆவது வட்ட பொறுப்பாளர் மணிகண்டன் கோபால் ஆச்சாரி மற்றும் பல தொண்டர்கள் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here