மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை
கல்பனா சாவ்லா விருது பெற்ற I.A.S .அதிகாரியை மீன்வளம் மீனவர் நலத்துறைக்கு நியமிக்க வேண்டும் என்று
அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய செயல் தலைவரும் & தேசிய செய்தி தொடர்பாளருமான
டாக்டர் நாஞ்சில் P.ரவி அவர்களின் கோரிக்கை …..
கடந்த 5 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும், எந்த வளர்ச்சி திட்டமும் பெறாமல் நலிவுற்ற நிலையில் இருந்த மீன்வளத்துறை
தற்போது பெரும்பான்மையுடன் பொறுப்பேற்று இருக்கும். புதிய அரசு மீனவர்கள் மீது அக்கறை கொண்டு மீன்வளத்துறையை மீன்வளம் மீனவர் நலத்துறை என்று பெயர் மாற்றியதை போன்று
மீன்வளம் மீனவர் நலத்துறைக்கு தொலை நோக்கு பார்வையுடன் சிறப்பாக செயல்படும் சிறந்த திறமையான மூத்த I.A.S. அதிகாரியை நியமிக்க வேண்டுகின்றேன்.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவரும்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆர்.டி.ஓ.வாக சிறப்பாக செயல்பட்டு வந்த நாட்களில் மணல் கடத்தலை முழுவதையும் தடுத்தவரும் தைரியமாக செயல்பட்டு 1995-1997-ஆம் ஆண்டுகளில் மணல் கடத்திய 250 லாரிகளையும் 175 படகுகளையும் பறிமுதல் செய்தவரும்
மத நல்லிணக்கத்துக்காக போராடியவர் மத பிரிவுகளுக்கிடையே அமைதியை ஏற்படுத்தியவர். மத கலவரங்களை முளையில் தடுத்தவர்.
1991 ஆம் ஆண்டு முதல் ஐ.ஏ.ஸ்.அதிகாரியாக பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவராக சிறப்பாக சேவை ஆற்றியவரும்.
மீனவ சமுதாயத்தினர் இடையே அடிக்கடி நடந்த வன் முறைகளை முடிவுக்கு கொண்டு வந்தவர். மீனவ சமுதாய மக்களின் அன்பை பெற்றவரும், தொலை நோக்கு பார்வையுடன் செயல்படுபவரும்..
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க தலைவரும், முத்தமிழ் அறிஞர், முத்தமிழ் வித்தகர், டாக்டர் கலைஞர் அவர்களால் வீர செயலுக்காக கல்பனா சாவ்லா விருதை 2008 பெற்றவருமான திருமதி. ஜோதிநிர்மலா ஐ.ஏ.ஸ் அவர்களை தமிழக மீனவளம் மீனவர் நலத்துறையின் ஆணையாளர் மற்றும் இயக்குனர் ஆக நியமித்து.
இருளில் இருக்கும் இந்த 1 கோடி மீனவ மக்களுக்கு நல்ல பல திட்டங்களை தீட்ட டாக்டர் கலைஞர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட திருமதி: ஜோதிநிர்மலா ஐ.ஏ.ஸ் அவர்களை நியமிக்க வேண்டும் என்று
அகில இந்திய மீனவர் சங்கத்தின் சார்பில்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும்
உயர்திரு. தமிழக தலைமை செயலாளர் இறையன்பு I.A.S அவர்களையும்
தமிழக மீனவளம் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்களையும்.
வேண்டி விரும்பி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் .
நன்றி! . வணக்கம்.
இவண்.
அகில இந்திய மீனவர் சங்கம் (NUF
















