கொரோனா தடுப்பூசி முகாம் பல்வேறு பகுதிகளில் போடப்பட்டு வருகிறது, பல்வேறு அமைப்பினர் மட்டுமல்லாமல் வியாபாரிகள். தொண்டு நிறுவனங்கள், தடுப்பூசி முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டு வருகின்றனர்.இன்று சென்னை கோபாலபுரத்தில் கோபாலபுரம் அரிமா சங்கமும் சென்னை பெரு நகராட்சி இணைந்து முன்கள பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 250 க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்து பலருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.நிகழ்ச்சியை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்.ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை அரிமா கோபாலபுரம் தலைவர் ஏழுமலை தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்திருந்தார். உடன்.டாக்டர் சரண்யா.பானுமதி ஆகியோர் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
















