பள்ளிப்பட்டு பஜார் வீதி சவுக்கு கட்டைகளால் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டது!

0
641

திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் கொரோணாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.பள்ளிப்பட்டு பேரூராட்சி ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்ட எல்லையை ஒட்டி உள்ளதால் ஊருக்குள் வருவதற்கு 8-வழிகள் உள்ளன.கொரோணா முதல் அலை வந்தபோது பள்ளிப்பட்டில் சுமார் 50-நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனர்.
அதன் பிறகு படிப்படியாக பாதிப்பு குறையத்தொடங்கியது அச்சம் நீங்கியது.பள்ளிப்பட்டு வட்டார சுகாதார அதிகாரி(BMO) திரு.தனஞ்செயன் மிகச்சிறப்பாக செயலாற்றினார்.100% பாதுகாப்புடன் இருந்த நிலையில் திருத்தணி தொகுதியின் முன்னாள் MLA-நரசிம்மன் தன் பணியில் குறுக்கீடு செய்கிறார் என்று உயர்மட்ட அதிகாரிகளுக்கு MLA மீது புகார் மனு அனுப்பியதால் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
தூய்மையாக நேர்மையாக அரசு சட்டப்படி பணியாற்றிய இவர் இல்லாத சூழ்நிலையில் ஊருக்குள் கொரோணா கோர தாண்டவம் ஆடியது.இரண்டாம் அலை வந்து அதன் தாக்கம் அதிகரித்துள்ளது.மீண்டும் திரு தனஞ்செயலு அவர்களே தற்சமயம் BMO-ஆக பணியாற்றுகிறார்.பள்ளிப்பட்டுக்கு வருகை புரியும் ஆந்திரா குக்கிராம மக்கள் நிறைய பேர் மனநிலை கொரோணா இல்லை என்பது தான்.அவர்களுக்கு சரியான விழிப்புணர்வு வழங்கப்படவில்லை.தற்போது பள்ளிப்பட்டு பேரூராட்சியில் கொரோணா பரவ ஆரம்பித்துள்ளது.பஜார் வீதியில் வெளியூர் மக்கள் அதிகம் வருவதால் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது.
தமிழக அரசு முழு லாக்டவுன் அறிவித்திருந்தாலும் முக்கியமாக ஆந்திர மக்களின் அதிக வருகையே பரவலுக்கு காரணமாக உள்ளது.பஜாரில் 2-பேர் கொரோணாவுக்கு மரணம் அடைந்துவிட்டதால் மக்களுக்கு முழு பாதுகாப்பு வழங்குவதற்காக பள்ளிப்பட்டு சுகாதாரத்துறை வட்டார சுகாதார அதிகாரி தனஞ்செயன்(BMO), பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி,பள்ளிப்பட்டு தாசில்தார் கதிர்வேல்,ஓய்வூதிய தாசில்தார் சண்முகவேல் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன்,கிராம நிர்வாக அதிகாரி பணியாளர்கள் அனைவரும் பள்ளிப்பட்டு பஜார் முழுமையாக மூன்று பக்கமும் சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலிகள் அமைத்தனர்.வியாபாரிகள் அதிகாரிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு தந்தாலும் மக்கள் சரியான முறையில் ஒத்துழைப்பு தராததாலேயே கொரோணா பரவியது.அதிகாரிகளும் கடினமாக பணியாற்றுகின்றனர்.சுகாதாரத்துறை BMO பல்வேறு சிறப்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி அதீத அக்கறையோடு மக்கள் பணி ஆற்றிக்கொண்டுள்ளார்.காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் தீவிரமாக உள்ளனர்.எது எப்படி இருந்தாலும் மக்கள் சுயசார்புடன் ஒட்டுமொத்தமாக கொரோணாவை விரட்டும் பணியில் ஈடுபட வேண்டும் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்பதே அனைவர் வேண்டுகோள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here