மருத்துவ பயன்பாட்டிற்காக சென்னை திருவொற்றியூா் பேசின்ரோட்டில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான கான்காா் கண்டெய்னா் யாா்டு நிறுவனத்திற்கு
மேற்குவங்கம் மாநிலம் துர்காபூர் பகுதியில் இருந்து நான்கு கொள்கலன்களில் ஆக்ஸிஜன் 80 டன்
ரயில்மூலம் வந்துள்ளது. இதனை நான்கு ஆக்சிஜன் டேங்கர் லாரிகளில் ஒவ்வொரு லாரிக்கும் 20டன் வீதம் ஆக்சிஜன் ஏற்றி சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூர் அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட பணியை ஆய்வு செய்ய மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்கள் சுகாதாரதுறை அமைச்சர்
மாண்புமிகு P.K.சேகர்பாபு
இந்து அறநிலைய துறை அமைச்சர்
திரு. டாக்டர் ராதாகிருஷ்ணன் சுகாதார துறை செயலாளர் மற்றும்
அரசு அதிகாரிகள் மற்றும் ஐநாக்ஸ் ஏர் புராடக்ட்ஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
















