வடசென்னை பகுதியில் இன்று முழு ஊரடங்ககை முன்னிட்டு காவல்துறையினர் தீவிர வாகன சோதனை!

0
325

தற்பொழுது தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது
இந்த முழு ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளான மளிகைக் கடைகள் காய்கறி அங்காடிகள் இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது வடசென்னை பகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒருபகுதியாக சுங்கச்சாவடி புதுவண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில்யில் ஈடுபட்டு வருகின்றனர்

அப்பொழுது அவ்வழியாக வரும் பொதுமக்களிடம் உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டும் அனுமதி அளிக்கின்றனர் முன்னதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த திருமணங்களுக்கு அனுமதி அளித்து இருப்பதால் திருமணங்களுக்கு சென்று வரும் பொது மக்களுக்கு காவல்துறையினரும் அனுமதி அளித்து வருகின்றனர் மேலும் அவசர தேவைகளுக்காக மருத்துவம் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளுக்கு செல்பவர்களுக்கும் அனுமதி அளிக்கின்றனர் மேலும் தேவையில்லாமல் சாலையில் நடந்து செல்பவர்களுக்கு காவல்துறையினர் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்
இருசக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு ஊர் சுற்றுபவர்களை பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here