திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவிலுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு திடீர் வந்தனர்!

0
326

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றா இன்றைய தினத்தில் இன்று தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு திடீரென திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக திடீர் வந்து சென்றுள்ளார் அம்மா வந்து சென்ற தலம் என்பதால் நானும் வடிவுடை அம்மன் அருளாசி பெற வந்துள்ளேன் என்றார் மேலும் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி

தேமுதிக கூட்டணி இழுபறி காரணம் என்பது ஒவ்வொரு கட்சிகளுக்கும் அந்தக் கட்சிக்காக பாடுபட்டவர்கள் மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்களுக்கும் போட்டியிட இடம் தேவை என்பதால் இந்த தருணத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்கு ஏற்ற சீட்டு கேட்பதால் கொஞ்சம் காலதாமதம் ஏற்பட்டது.
தமிழகத்தில் எந்தவிதமான குற்றம் குறையும் சொல்ல முடியாத ஆட்சியாக எடப்பாடி ஆட்சி அமைந்துள்ளது அம்மாவை எப்படி ஏற்றுக் கொண்டார்களோ அதே போல் எடப்பாடியார் ஆட்சியில் செய்யப்பட்டுள்ள நலத் திட்டங்களால் பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது புதிய வாக்காளர்களை எடப்பாடி அரசு ஈர்த்துள்ளது.
234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் இந்த அரசு தெளிவான அரசாக உள்ளது தங்கு தடையற்ற மின்சாரம் வழங்கியுள்ளது 100 யூனிட் மின்சாரம் அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது எனக் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here