தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின் சிக்கன வார விழா-மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வாரம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்;

0
249

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் 14 முதல் 20 வரை மின் சிக்கன வார விழா நடத்தப்படுகிறது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வாரம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மின்வாரியம் நடத்துகிறது.
இந்த ஆண்டும் இந்த மின்சார சிக்கன விழா சென்னை மின் பகிர்மான வட்டம்/வடக்கு திட்டத்திற்கு உட்பட்ட தண்டையார்பேட்டை கோட்டத்தில் இன்று (17.12.22) நடைபெற்று வருகிறது. இவ்விழாவினை
மேற்பார்வை பொறியாளர் பொறிஞர் சந்திரசேகரன். தண்டையார்பேட்டை செயற்பொறியாளர்
திரு எம் .என். ஜெகதீஷ் குமார் அவர்கள் தலைமையேற்று நடத்தி வருகிறார்கள்.
அவர்களுடன் பொறியாளர்கள் தொழிலாளர்கள் அலுவலர்கள் மற்றும் அனைவரும் பங்கேற்றனர்

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் முறைகள்
ஐஎஸ்ஐ முத்திரை கொண்ட நட்சத்திர குறியீடு கொண்ட மின்சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் .அவை தான் கூடுதல் மின்சார உபயோகத்தை தடுக்கும் .
மேலும் பாதுகாப்பாகவும் இருக்கும் தேவையில்லாத நேரத்தில் மற்றும் யாரும் இல்லாத அறைகளில் மின்விளக்குகளை மற்றும் மின்விசிறிகளை நிறுத்த வேண்டும். சாதாரண குண்டு விளக்குகளுக்கு பதில் முடிந்தவரை எல்இடி விளக்குகள் அல்லது சிஎப்எல் விளக்குகளை பயன்படுத்த வேண்டும். மின்விளக்குகள் மற்றும் மின் சாதனங்களை அடிக்கடி துடைக்க வேண்டும்.

மின்விசிறியின் பேரிங்களுக்கு அடிக்கடி ஆயுள் போட வேண்டும். டியூப் லைட்டுகளில் பழைய சோக்குகளை மாற்றிவிட்டு எலக்ட்ரானிக் சோக்குகளை பயன்படுத்தலாம். மேலும் எல் இ டி ட்யூப் லைட்டுகளை பயன்படுத்தவும். மின்விசிறிகளில் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களை உபயோகப்படுத்தினால் மின்சாரம் மிச்சமாகும்.

பிரிட்ஜை அடிக்கடி திறந்து மூடுவதால் தொடர்ந்து கம்ப்ரஸர் இயங்கி மின்சாரம் செலவாகும். எனவே ஃப்ரிட்ஜை அடிக்கடி திறக்க கூடாது. மேலும் சுவற்றில் இருந்து 2 அடி தள்ளி வைக்க வேண்டும்.

வாஷிங் மிஷினை அதன் முழு திறனில் இயக்க வேண்டும். மேலும் அதில் உள்ள உலர் கருவியை பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். டிவி கம்ப்யூட்டர் மற்றும் மின் சாதனங்களை ரிமோட் மூலம் ஆப் செய்யாமல் சுவிட்ச் மூலம் ஆப் செய்ய வேண்டும்.

ஏசியை 22 டிகிரிக்கும் கீழே இயக்குவது அதிக மின் செலவை உண்டாக்கும். வணிகர்கள் தேவை இன்றி ஆடம்பர விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் .எல்இடி விளக்குகளை பயன்படுத்தினால் மின்கட்டணம் குறையும்.
தொழிற்சாலைகளில் சரியான திறன் கொண்ட நட்சத்திரக் குறியீடு உள்ள மின் மோட்டார்களை பயன்படுத்தினால் மின் நுகர்வு குறையும் .மேலும் மின் தேக்கிகளை பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் அதிக திறன் உள்ள நட்சத்திரக் குறியீடு உள்ள மோட்டார்களை பயன்படுத்த வேண்டும். அதிக மின்சாரத்தை செலவு செய்யும் மேலும் மின் தேக்கையை பயன்படுத்த வேண்டும்.
மேற்கண்டவாறு மின்சாரத்தை பயன்படுத்தினால் மின் கட்டணம் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here