காலடிப்பேட்டை- டாக்டர் முன்வர் கிளினிக்கில் 38 ஆண்டு காலம் பணியாற்றியவர் மேரி- வாடகை பாக்கி என்று காரணம் காட்டி கதவுக்கு பூட்டு போட்டு வெளியே தள்ளி கதவை பூட்டியது (மனிதபிமானம் எங்கே போனது)

0
416

சென்னை திருவொற்றியூர் ராஜாகடை பகுதியை
சேர்ந்த மேரி என்பவர்
செங்குன்றத்தை சேர்ந்த பவானி என்பவருக்கு சொந்தமான வீடு
ராஜாகடை அருகே உள்ள
ஜானவர் தெருவில்
உள்ளது அந்த வீட்டில் மேரி அவர்கள் குடியிருந்து வருகிறர்
இவர் காலடிப்பேட்டையில் உள்ள டாக்டர் முன்வர் என்பவர் கிளினிக்கில்
38 ஆண்டு காலம் பணியாற்றியவர் டாக்டர் முன்வர் அவர்கள் கொரோனோவால்
மரணமடைந்தார் டாக்டர் அவர்களின் மனைவியும் மகன் வசீமும் இந்த மேரி என்பவரை பணியில் இருந்து விலக்கி விட்டு அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மேரி அவர்களின் கைகள்
பக்க வாதத்தால் செயல்படாமல் இருக்க டாக்டர் முன்வர் அவர்களின்
மகன் வசீம் மேரி அவர்களை
உடல் நலம் சரியில்லாதவர் என்று கூட பாராமல் அவரை வீட்டில் கொண்டுவந்து விட்டு சென்றுவிட்டார்கள் அதுமுதல் இவரால் வாடகை கூட கொடுக்க முடியாமல் அந்த வீட்டின் சொந்தக்காரர் பவானி
என்பவர். வாடகை பாக்கி என்று காரணம் காட்டி அவர் வீட்டில் உள்ள மூன்று பெண்கள் ஒரு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆகியோரை வெளியே தள்ளி பொருட்களையெல்லாம் வெளியே வீசிவிட்டு கதவுக்கு பூட்டு போட்டு விட்டு தண்ணீர் மோட்டாரையும் கழட்டி கொண்டு சென்று விட்டார்கள் அவர் மேரி என்பவர் உடல்நலம் சரியில்லாமல் பக்கவாதத்தால் உடல் நலமில்லாமல் இருக்கின்ற இந்த நேரத்தில் வாடகை பாக்கி இருந்தாலும் கூட மனதளவில் மனிதாபிமானத்திற்கு கொஞ்சம் கூட இடம் தராமல் அவர்களை வெளியே தள்ளி கதவை பூட்டியது (மனிதபிமானம் எங்கே போனது, உதவி ஆணையாளர்
திரு ஆனந்தகுமார் அவர்களின் கவனத்திற்கு பத்திரிக்கையாளர்கள் கொண்டு சென்றனர் இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டனர் அதன்படி உதவி ஆய்வாளர் அவர்களை அனுப்பி இந்த புகார் மீது விசாரித்து நடவடிக்கை மேற்கொள்வதாக
தெரிவித்தார்கள்
அதன்பின் வீட்டின் பூட்டு அகற்றப்பட்டு
பாதிக்கபட்ட பெண்களை வீட்டின் உள்ளே அனுமதித்தார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here