கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாவது மெகா வேலைவாய்ப்பு முகாம்!

0
248

சென்னை அடையாறில் உள்ள பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாவது மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

பாட்ரிஷியன் கல்லூரியுடன் ICT ACADEMY  மற்றும் MAGIC BUS நிறுவனங்கள் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் தகவல் தொழில்நுட்பத் துறை, வங்கித் துறை, கல்வித் துறை, மேலாண்மைத் துறை, சேவைத் துறை உள்ளிட்ட  பல்வேறு துறைகளிலிருந்து 85 க்கும்  மேற்பட்ட முன்னணி நிறுவனங்களும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் நிறுவனங்களும் இம்முகாமில் பங்கேற்றனர்.

கல்லூரியின் இயக்குநர் மற்றும் செயலாளர் அருட்சகோதரர் டாக்டர் ஸ்டெனிஸ்லாஸ் தொடங்கி வைத்த இம்முகாமில் டாக்டர் பாத்திமா வசந்த், டாக்டர் உஷா ஜார்ஜ், டாக்டர் கீதா ரூபஸ், டாக்டர் மீனா மற்றும் 1000 த்திற்க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

12,000 இளைஞர்கள் இம்முகாமில் பங்கேற்று சுமார் 5,000 க்கும் மேற்பட்டோர் தேர்வாகி பணிநியமன ஆணையைப் பெற்றுள்ளதாகவும், இனி வரும் காலங்களில் பன்னாட்டு அளவிலான வேலைவாய்ப்பு  முகாமினை நடத்தவும் கல்லூரி திட்டமிட்டுள்ளதாக கல்லூரியின் இயக்குநர் மற்றும் செயலாளர் அருட்சகோதரர் டாக்டர் ஸ்டெனிஸ்லாஸ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here