சென்னை திருவொற்றியூரில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் மீண்டும் வேல் யாத்திரையை துவக்கி கைது
.திருத்தணியில் கடந்த ஆறாம் தேதி துவங்கிய வேல் யாத்திரை போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு பாதியில் நின்ற வேல் யாத்திரை இன்று திருவொற்றியூர் வடிவுடை அம்மன் திருக்கோவிலில் முன்பு இருந்து மீண்டும் வெற்றிவேல் யாத்திரை நடைபெறுகிறது முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் முருகன் கரு. நாகராஜன் அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட பாஜகா வினருக்கு வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி கோவில் முன்பு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டு வழிபாடு நடத்திய பின்னர் கோவில் ராஜகோபுரம் முன்பு பாஜக வண்ண பலூன்களை பறக்க விட்டு விட்டு அங்கு அமைக்கப்பட்ட மேடையில் பாஜக தலைவர் முருகன் உரையாற்றினார்
பின்னர் வேல் யாத்திரை திருச்செந்தூர் நோக்கி புறப்படும் என்று கூறி வேல் யாத்திரையைத் துவக்கினார் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் வேலு யாத்திரை நடத்த வேண்டும் என்றால் எத்தனை பேர் செல்ல வேண்டும் என்றும் எந்த வழிகளில் செல்ல வேண்டும் என்றும் காவல்துறைக்கு முறையான அறிவிப்பு வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில் வழக்கை பத்தாம் தேதி தள்ளி வைப்பதாகவும் கூறி இருந்த நிலையில இன்று திடீரென திருவொற்றியூரில் ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது
இதனை அடுத்து காவல்துறையினரால் பாஜக மாநில தலைவர் முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் பாஜக தொண்டர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர் பாஜகவினர் கைது செய்யப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது துணை ராணுவத்தினர் உள்பட காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டதால் பதட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்
















