தினம் தினம் பதற்றத்தோடு பயணிக்கும் மணலி விரைவு சாலை பகுதியில் நாளுக்குநாள் கண்டெய்னர் லாரிகளால் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே வந்தன,போக்குவரத்து போலீசார் லஞ்சம் பெற்றுக்கொண்டு பொதுமக்கள் செல்லும் சாலையில் கண்டனர் லாரிகளை அனுப்புவதால் போக்குவரத்து போலீசார் மீதே லாரி ஏறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இந்நிலையில் இதனை கண்டித்து வட சென்னை பொது நல சங்கம் சார்பில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சங்கத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் முதல் சத்தியமூர்த்தி நகர் வரை மணலி விரைவு சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாள் ஒன்றுக்கு 2,000 கனரக வாகனங்கள் ஏற்றுமதி இறக்குமதி துறைமுகத்துக்கு செல்லும் நிலையில் போக்குவரத்துப் போலீஸாரின் அலட்சியத்தால் லஞ்சம் பெற்றுக் கொண்டு பொதுமக்கள் சாலையில் அனுப்புவதால் வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தினம் ஒரு விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்படுவதாக குற்றம்சாட்டினர்
மேலும் அவசர தேவைகளுக்கு வேலைக்கு செல்வோர் மருத்துவமனைக்கு செல்வோர் என எவ்வித வாகனங்களும் செல்ல இயலாமல் கண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு வருவதாகவும் வேண்டுமென்றே போக்குவரத்து நெரிசலைக் ஏற்படுத்துவதாக புகார் தெரிவித்துள்ளனர் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் உடனடியாக சென்னை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்
உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக எண்ணூர் உதவி ஆணையர் ராஜேந்திரன் அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்
பொது மட்டுமல்லாது போக்குவரத்து போலீசாரே கண்டெய்னர் லாரி விபத்துக்களில் சிக்கி உயிரிழந்த நிலையில் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து பொதுநல சங்கத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
















