*காசிமேட்டில் நூதன முறையில் செல்போன் திருட்டு
சென்னை காசிமேட்டில் அவசரத்திற்கு போன் பேசிவிட்டு தருவதாக கூறி நூதன முறையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள வார்பு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த துரோபதின் என்ற இளைஞரிடம் அப்பகுதி வழியாக நடந்து வந்த இரு வாலிபர்கள் அவசரத்திற்கு போன் பேசி விட்டு தருவதாக கூறி துராபுதீனிடம் செல்போனை கேட்டுள்ளனர் அவசரம் என்று கூறியதனால் துரோபுதீனும் செல்போனில் பேசுவதற்கு கொடுத்துள்ளார் ஆனால் ஒரு இளைஞர் மட்டும் போனில் பேசியவாறே தப்பி ஓடியுள்ளார் தனது செல்போன் திருடப்பட்டது கண்டு மற்றொரு நபரையும் பிடிக்க முயற்சித்த பொழுது அவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் இதனை அடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
காசிமேடு காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் சோதனை செய்த போது திருவொற்றியூர் பகுதியைச் சார்ந்த காளியப்பன் மற்றும் புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து மத்திய புழல் சிறையில் அடைத்தனர்
அவசரத்திற்கு தொலைபேசியில் பேச வேண்டும் என்று கூறி நூதன முறையில் செல்போனை பறித்து சென்ற சம்பவம் காசிமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது














