திருவொற்றியூர் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சுடர்மணி(34) மீனவரான இவர் கடந்த புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க சென்று உள்ளார் இந்நிலையில் இன்று கடற்கரையில் அவரை மர்ம நபர்கள் துரத்தி செல்வதாக அங்குள்ளவர்கள் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்
உறவினர்கள் காசிமேடு கடற்கரைக்கு வந்து பார்த்தபோது முகத்திலும் வயிற்றுப் பகுதிகளிலும் பலத்த வெட்டு காயங்களுடன் இறந்த கிடந்தார் சுடர்மனி கதறி அழுத உறவினர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்
சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் கடற்கரையில் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா அல்லதுகொலை நடந்த இடத்திற்கு அருகாமையில் மதுபாட்டில்கள் இருந்ததால் குடிபோதையில் கொலை நடைபெற்ற தா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவாரத்தில் கடற்கரையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
















