தாராபுரத்தில் பிரபல நகை கடை அதிபா் நகை சீட்டு நடத்தி மோசடி சினிமா நடிகைகள் வைத்து பரிசுப்பொருள் வழங்கியதால் வாடிக்கையாளர்கள் குவிந்தனர்
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள் கடைமுன்பு திரண்டு சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
தாராபுரத்தில் உள்ள பிரபல நகை கடை அதிபா் நகை ஏலச் சீட்டு பணத்தை மோசடி செய்து
தலைமறைவானதாக பரவிய தகவலையடுத்து
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள் கடைமுன்பு திரண்டு சாலைமறியலில் ஈடுபட்டனா்.
தாராபுரம் சின்னக்கடை வீதியை சோ்ந்த பலராமன் என்பவரது மகன் அாிகரன் (வயது-40). இவா்
தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் வெங்கட்ராம் செட்டியாா்ஸ் தங்கமாளிகை என்னும் பெயாில்
பிரபல நகை கடை வைத்து நடத்தி வந்தாா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட
இந்த நகைக்கடை திறப்பு விழாவுக்கு பிக்பாஸ் பிரபலம்நடிகை ஓவியா வரவழைக்கப்பட்டு இருந்தாா். இதனால் இந்த
கடை அப்போது மிக பிரபலம் ஆனது. மேலும் அவ்வப்போது கடையில் நகை வாங்குபவா்களுக்கும் மாத சீட்டு கட்டுபவர்களுக்கு குலுக்கல் முறையில் கார்,மோட்டர் சைக்கிள் ,மொபட்கள் பல பரிசுப் பொருள்களை வழங்க சினிமா நடிகை நிக்கிகல்ராணி சின்னத்திரை நடிகை சிவானி இதனால் அந்த கடைக்கு தாராபுரம் மற்றும்
அதைச்சுற்றியுள்ள பகுதிகளை 30க்கும் மேற்பட்ட கிராமத்தை சோ்ந்தவா்கள் ஏராளமானோா் வாடிக்கையாளா் ஆகினா். அவா்களிடம்
தாங்கள் நகை ஏலச் சீட்டு நடத்துவதாக கூறிய அந்த கடை உாிமையாளா் சுமாா் 2500க்கும்
மேற்பட்ட வாடிக்கையாளா்களிடம் ரூபாய் 500-முதல் ரூபாய் 5 ஆயிரம் வரை மாத தவணையாக
பெற்று உள்ளாா். அந்த சீட்டுகள் 12 முதல் 36 மாதங்கள் வரை நடத்தப்பட்டதாக தொிகிறது. இந்த
நிலையில் அதில் பணம் செலுத்திய வாடிக்கையாளா்கள் பலா் சீட்டு முடிந்த உடன் அதற்கான நகையை
கேட்டு உள்ளனா். ஆனால் நகை கடை சாா்பில் சாிவர பதில் சொல்லாமல் இருந்து வந்து உள்ளனா்.
இந்த நிலையில் கடந்த 7 நாட்களாக கடை மூடப்பட்டு கடையின் முன்பு 2 நாட்கள் விடுமுறை
என்று பதாகை வைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளா்கள் கடை
உாிமையாளரை தொடர்பு கொள்ளும்பொழுதுசெல் சுவிட்ச் அப் செய்யப்பட்டிருந்தாதல் பொதுமக்கள் கடையை முற்றுகையின்டு சாலை மறியல் செய்தனர் மற்றும் இந்த கடைக்கு மொத்த தங்கம் மற்றும் வெள்ளி வியபாரிகள் கோடிக்கணக்கில் சென்னை ,கோவை ,மும்பை, மதுரை வியாபாரிகள் தாராபுரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்
கடை உரிமையாளர் பங்கு மார்கட்டில் உள்ள பொருள் சந்தையில் (கம்மாடிட்டி) செய்து தங்கத்தில் பணம் விட்டதாகவும் கூறப்படுகிறது மேலும் தாராபுரத்தில் சாலை மறியல் செய்த போது காவல்துறையினர் சமரசம் செய்து புகார் அளிக்க வற்புறுத்தியதன் பேரில் 200க்கு மேற்பட்ட புகார் அளித்தது பிறகும் அதைத் தொடர்ந்து கிராம மக்கள் இன்றும் புகார் அளித்து வருகின்றனர் தாராபுரத்தில் நடிகைகளை வைத்து கடை நடத்தி பல கோடி ரூபாய் தங்கம் மற்றும் பணங்களை பெற்று தலைமறைவாக உள்ள கடை உரிமையாளரை காவல்துறையினர் புகார் மனு வாங்கி வருவதால் தருவதில் பரபரப்பாக பேசப்படுகிறது
தாராபுரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அந்த நகைகடையில் வாடிக்கையாளராக ஆகி பல லட்சம் முதலீடு செய்ததாக தெரிகிறது குண்டடம் மூலனூர் அலங்கியம்உள்ள காவல் துறையினரும் அந்த கடைக்கு வாடிக்கையாளர் ஆகி பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து உள்ளனர்
தாராபுரத்தில் வெங்கட்ராம செட்டியார் என்ற பெயர் பிரபலமாகி உள்ளது அந்தப் பிரபலம் கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக பல கிராமங்களிலிருந்து விவசாயிகளிடமிருந்து சசிறுதானியங்கள் பயிறு வகைகள்வாங்கிப் பிரபலமாகி அதை வைத்து கிராமத்தில் உள்ள கிராம மக்கள் வெங்கட்ராம செட்டியார் நகைக்கடையில் முதலீடு செய்துள்ளனர் மேலும் கடைவீதியில் உள்ள சிறு கடை மற்றும் லாட்ஜில் வைத்து 4.5 கோடி ரூபாய் தனியார் வங்கியில் கடன் பெற்று உள்ளதாகவும் தெரிகிறது தாராபுரத்தில் உள்ள அரசியல் மற்றும் தொழிலதிபர்களிடம் பல கோடி கடன் பட்டுள்ளதாகவும் தெரிகிறது













