சதுரங்க விளையாட்டில் சென்னை வேலம்மாள் பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்று தேசிய அளவில் வெற்றி;

0
253

தேசிய அளவிலான சதுரங்க விளையாட்டில் சென்னை முகப்பேர் கிழக்கு, வேலம்மாள் நிறைநிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் நிகல் மகிழணன் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் ஹர்ஷ்வர்தன்.ஜி.பி. முறையே (யு-14),(யு-17) பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். அதேபோல் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவி பூர்ணா ஸ்ரீ. எம்.கே., எஸ்.ஜி.எஃப்.ஐ. நடத்திய 2018-19 ஆண்டுக்கான செஸ் சாம்பியன்ஷிப்(யு-17) பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

ஊரக கைத்தொழில் அமைச்சர் திருமிகு. பி.பெஞ்சமின் அவர்களும், தமிழ் அலுவலக மொழி மற்றும் தமிழ் கலாச்சார அமைச்சர் திருமிகு. மா.ஃபா.கே. பாண்டியராஜன் அவர்களும், மாணவர்களின் தேசிய அளவிலான சாதனையைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக மாணவர்களுக்குத் தலா இரண்டு லட்சம் ரூபாயும், மாணவிக்கு ஒரு லட்சம் ரூபாயும் காசோலையாக வழங்கிக் கௌரவித்துள்ளனர்.

சதுரங்க விளையாட்டில் தேசிய அளவில் சாதனை படைத்துள்ள மாணவர்களைப் பள்ளி நிர்வாகம் வாழ்த்தி மகிழ்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here