புதுவண்ணாரப்பேட்டையில் நள்ளிரவில் 8 இருசக்கர வாகனம் எரிந்து நாசம்- சைக்கோ கைவரிசையா பரபரப்பு;

0
371

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் நள்ளிரவில் 2 இடங்களில் இரு சக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

புதுவண்ணாரப்பேட்டை அம்மணியம்மாள் தோட்டம் நான்காவது தெரு பகுதியில் இரண்டு இடங்களில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் 2:00 மணி அளவில் 8 இருசக்கர வாகனங்கள் எரிந்து அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது

வெப்பம் தாளாமல் இருசக்கர வாகனங்கள் வெடித்து சிதறும் சத்தத்தை கேட்டு அலறி எழுந்து ஓடி வந்த பொதுமக்கள் வாகனங்கள் எரிவதை கண்டு அச்சம் அடைந்தனர் உடனடியாக தீயை அணைக்க முற்பட்ட போது இரவு நேரங்களில் அணைக்க யாரும் முன்வராததால் தீ அடுத்தடுத்து உள்ள வாகனங்கள் முழுவதுமாக எரிந்து சாம்பலாகியது இதுகுறித்து தனியார் வங்கி ஊழியர் பிரகாஷ் தனியார் நிறுவன ஊழியர் அருண் தாமஸ் ஜெயப்பிரகாஷ் உட்பட 8 பேர் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையர் பொறுப்பு சாமிநாதன் மற்றும் உதவி ஆணையர் அனந்தகுமார் எரிந்த இருசக்கர வாகனங்களை நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் யார் தீ வைத்தது என்பது குறித்து கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது மேலும் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் இரு சக்கர வாகனங்கள் தீயிட்டு எரிந்து இருப்பதால் சைக்கோ கைவரிசையா அல்லது முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here