பத்தாண்டுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் : அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !

0
329

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.

தமிழக அரசு ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாளில் பத்தாண்டுக்கும் மேலாக உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்து உள்ளது. அரசியல் சாசணை பிரிவு 161ன் படி மாநில அமைச்சரவை முடிவு செய்து சிறைவாசிகளை விடுதலை செய்வதற்க்காக மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்து அதை அவர் ஏற்று பரிந்துரைக்கப்பட்ட சிறைவாசிகள் விடுதலை செய்ய படுகிறார்கள்.

மேலும் இஸ்லாமிய சிறைவாசிகள் மருத்துவ சிகிச்சை பெற ஜாமினில் செல்ல கூட அனுமதிக்க படுவதில்லை சிறை விதிகளின் படி சிறைவாசிகளுக்கு வழங்கும் பரோல் விடுவிப்பு கூட இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மறுக்கபடுகிறது . இதனால் சிறைவாசிகள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கபட்டு சிலர் இறந்துள்ளனர் . விடுதலை ஆவதற்கு முழு தகுதிகள் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.

எனவே தமிழக சிறையில் பத்தாண்டுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் தமிழக அரசு அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here