*ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை:

0
337

1. திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில பொது செயலாளர் எஸ்.ஷானகான் கோரிக்கை மனு கொடுத்துள்ளார் இவ்மனுவில் கூறிருப்பதாவது.

1) ஊரடங்குனால் தனியார் கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் திறக்க முடியாத சூழ்நிலை இருக்கும் போது மாணவர்களின் இந்தாண்டு பாக்கி நிலுவை தொகையை கட்ட சொல்லி கட்டாய படுத்தி வருகின்றனர் . எனவே மாணவர்களின் இந்தாண்டு பாக்கி நிலுவை தொகையை முற்றிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் .

2) ஏழை எளிய மக்கள் இ-பாஸ் பெற்று தனியார் வாகனத்தில் செல்ல கூடிய அளவிற்கு பொருளாதாரம் இல்லாமல் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். ஆகவே தகுந்த விதிமுறைகளோடு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

3) இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே அரசு பணிகள் வழங்க படும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும் அது போன்று தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கே அரசு பணி என்கிற சட்டத்தை இயற்றி தமிழ்நாட்டை சேர்ந்த படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு அரசு பணிகளை வழங்க வேண்டும் .

4) அம்மா காப்பீடு திட்டத்தில் தனியார் மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் புறகக்கணித்து வருகிறார்கள். இதனால் நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே தனியார் மருத்துவ மனையில் அம்மா காப்பீடு திட்டத்தில் நோயாளிகளுக்கு முறையான மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக கேட்டு கொள்கிறோம் என்று இவ்மனுவில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here