கொடுங்கையூர் குப்பை மேடு அருகில் அரிய வகை மண் பாம்பு தீயணைப்புத்துறையினர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பு!

0
393

கொடுங்கையூர் குப்பை மேடு அருகே, உள்ள கடையை ஒட்டி, சாலையோரம் அரியவகை மண் பாம்பு சுற்றித்திரிந்துள்ளது.

இது குறித்து, அக்கம் பக்கத்தினர், கொருக்குபேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு, அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், அங்கு சுற்றித்திரிந்த, அரியவகை மண் பாம்பை, லாவகமாக பிடித்தனர்.
பிடிப்பட்ட பாம்பை, தீயணைப்பு துறையினர், சென்னை கிண்டி வனத்துறையில் ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here