புகைப்படக் கலைஞர் மாதவன் மறைவு – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி;

0
317

தினகரன் நாளிதழில் பத்தாண்டுகளுக்கு மேலாக புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியவர் நமது அருமைச் சகோதரர் மாதவன். கடந்த சில வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.நோயின் தாக்கம் கடுமையாக இருந்தபோதிலும் அதிலிருந்து மீண்டு வர போராடிக் கொண்டு இருந்தார்.
இந்த நிலையில்
அனைவரிடமும் பேரன்பு கொண்டு பழகிய சகோதரர் மாதவன் இன்று (13-08-2020) பகலில் இயற்கை எய்தினார்.

42 வயதில் இப்படி ஒரு மரணம் நம்மை துயரக்கடலில் ஆழ்த்தியுள்ளது.
அன்பு சகோதரர் மாதவன் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
மாதவனை இழந்து வாடும் அவரது மனைவி , பதினோரு வயது அருமை மகள் , தாய், சகோதரர் என குடும்பத்தினர் அனைவருடனும் நண்பர்களுடனும் துயரத்தில் பங்கேற்கிறோம்.

மாதவனின் திரு உடல் அஞ்சலிக்காக அவரது சகோதரர் இல்லத்தில் 41/2 TNHB ஃபிளாட்ஸ்,நேதாஜி நகர், திருமுல்லைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது.
நாளை (14-08-2020) பிற்பகலில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.
மறைந்த புகைப்படக்கலைஞர் மாதவனின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி உதவி செய்யவேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வரை வேண்டுகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here