சென்னை தண்டையார்பேட்டை ஐஓசி பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சென்னை ஏழுகிணறு சண்முகம் தெரு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (38) தந்தை பெயர் கேசவன் .கூலி தொழிலாளியான சிவகுமாருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் திருமணம் நடைபெற்று வாழ்ந்து வந்தனர் இவர்கள் இருவருக்கும் 12 வயதில் ஒரு மகளும் 7 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர்
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப பிரச்சனையின் காரணமாக வீட்டை விட்டு தனது நண்பர்களுடன் வசித்து வந்தார் சிவகுமார்
சில மாதங்களுக்கு முன்பு சிவகுமாரின் மாமியார் விஜயலஷ்மி சமரசம் பேசி தன் மகளை பத்து நாட்கள் வீட்டில் வைத்திருப்பதாக கூறி விழுப்புரத்துக்கு அழைத்து சென்றுள்ளார் ஆனால் 10 நாட்கள் ஆகியும் ரேவதியை அவர்களின் தாயார் விஜயலட்சுமி அனுப்பாமல் மிரட்டும் தோணியில் சிவக்குமாரிடம் பேசியுள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகுமார் பூக்கடை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினர் சிவக்குமாரை அலைக்கழிக்கும் நோக்கில் இருந்துள்ளனர் தனது பிள்ளைகளை பார்க்க விடாமலும் மனைவியிடம் பேச விடாமலும் மாமியார் விஜயலட்சுமி தடுத்துள்ளார் இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சிவகுமார் கடந்த 7ஆம் தேதி மாலை ஐந்து நிலையம் அருகே விஷம் அருந்தி தற்கொலைக்கு செய்துகொண்டார் உடனடியாக அருகில் இருந்த அவரது உறவினர்கள் மயங்கிய நிலையில் இருந்தார் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் மூன்று நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சிவகுமார் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது
தனது அண்ணனின் இறப்பிற்கு நீதிகேட்டு ஆர்கே நகர் காவல் நிலையத்திற்கு சென்ற அவருடைய சகோதரர் பாலமுருகன் தனது அண்ணன் அவருடைய இறப்பிற்கு மாமியார் விஜயலட்சுமி மைத்துனர் புகழேந்தி மற்றும் அவருடைய சகோதரி ஹேமா உள்ளிட்டோர் தான் காரணம் என கடிதம் எழுதிவிட்டு உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.














