ஆகஸ்ட் 16ல் மெகா பேரணிக்கு திட்டம்;

0
5

சென்னையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக வீ தி லீடர்ஸ் அமைப்புன் நிறுவனர் அண்ணாமலை தலைமையில் பேரணி நடத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் 16ஆம் தேதி இந்த பேரணி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி வீ தி லீடர்ஸ் என்ற புதிய அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பில் இதுவரை சுமார் 20 லட்சம் பேர் வரை இணைந்துள்ளனர். இந்த அமைப்பை ஒவ்வொரு மாவட்டத்திலும் வலுப்படுத்தி அரசியல் கட்சியாக மாற்ற அண்ணாமலை முடிவு செய்துள்ளார். இதற்கான பணிகளில் அண்ணாமலை தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.இந்த வீ தி லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இதில் அண்ணாமலை பேச்சு தமிழ்நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியது. ஜூலை மாதத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இந்த அமைப்பு நடத்தியது.இந்த நிலையில் அடுத்ததாக சென்னையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக வீ தி லீடர்ஸ் அமைப்புன் நிறுவனர் அண்ணாமலை தலைமையில் பேரணி நடத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் 16ஆம் தேதி இந்த பேரணி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here