திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ஆத்திக்காட்டுபுதூரில் 40 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்து உள்ள நந்தவனம் பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட ஆத்திக்காடு கிராமத்தில், வீடு கட்டி 60 ஆண்டுகளாக குடியிருக்கும் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களான 40 குடும்ப மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வலியுறுத்தி ஆதி தமிழர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் குண்டடம் காளிமுத்து தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது நந்தவனம்பாளையம் கிராமம் ஆத்திக்காட்டுபுதூரில் தாழ்த்தப்பட்ட 40 அருந்ததியர் குடும்பங்கள் 60 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருவதாகவும், இங்கு வசிக்கும் மக்கள் பஞ்சாயத்தில் வீட்டு வரி, மின்சார வரி, செலுத்தியும் 60 ஆண்டுகளாக 40 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் இம்மக்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும், பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் என பல மனுக்கள் கொடுத்தும் இதுவரை பட்டா கிடைக்காத அவலநிலையில் வாழ்வதாகவும், மக்கள் வசிக்கும் இப்பகுதியில் 70ஆண்டுகளுக்கு முன்பே பூமிதானத்தில் ஒரு தாழ்த்தபட்ட நபருக்கு வழங்கியதாக கூறபடுகிறது, ஆகவே தாங்கள் 60 ஆண்டுகளாக வசிப்பதும் தாழ்த்தபட்ட மக்கள் என்பதை கருத்தில் கொண்டு தனி நபருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்து உடனடியாக ஆத்திகாடு மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்தனர்.
நிருபர் ஆனந்தகுமார்















