திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்.

0
247

மாவட்ட கழக பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் ஏற்பாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஆர்.எஸ்.பாரதி- அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் சிறப்புரையற்றினார்கள்

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் மீஞ்சூர் பாலகோட்டி திருமண மண்டபம் வளாகத்தில் நடைபெற்றது இதில் மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன் தலைமை தாங்கினார் ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் மு.மணிபாலன், கி.வே.ஆனந்தகுமார், டி.கே.சந்திரசேகர், நா.செல்வசேகரன், ஆ.சத்தியவேல், கா.சு.ஜெகதீசன், ஜான்பொன்னுசாமி, ந.பரிமளம், மு.முரளிதரன், ஜி.ரவிக்குமார், இரா.அறிவழகன், அபிராமி குமரவேல், பி.முத்து, மீஞ்சூர் பேரூராட்சித் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் ஆகியோர் வரவேற்புரையற்றினார்கள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.மூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் மு.கதிரவன், கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, எம்.எல்.ரவி, எஸ்.ரமேஷ், கே.சுப்பிரமணி, பி.வெங்கடாசலபதி, ஏ.வி.ராமமூர்த்தி, பா.செ.குணசேகரன், டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்
இந்த பொது உறுப்பினர் கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனை வழங்கினார்கள்
இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மார்ச் 1 அன்றும் கழக தலைவர் முதலமைச்சர் முத்துவேல் கருனாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் முழுவதும் உள்ள நகரம், பேரூர், ஊராட்சிகள், ஊர்கள் தோறும் கழக கொடியேற்றி, இனிப்பு வழங்கி, நலதிட்டங்கள், வழங்கி பொதுக் கூட்டங்கள் நடத்தி மிக சிறப்புடன் நடத்திட வேண்டும்
இளைஞர் அணி மாணவர் அணி மற்றும் மகளிர் அணி தீவிர உறுப்பினர் சேர்த்திடவும்
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகத்திற்கு உட்டபட்ட பொன்னேரி, கும்மிடிபூண்டி தொகுதிகளுக்கு உட்பட்ட கிளைகளில் நமது கழக கொடி கம்பங்கள் நிறுவப்படாத இடங்களில் மாவட்ட கழக பொறுப்பாளர் தொகுதிக்கு தலா 200 கொடிகம்பங்கள் வழங்குவது எனவும்
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழக அரசை அனைத்து வகைகளிலும் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக வல்லூர் ரமேஷ்ராஜ் நியமித்தமைக்காக, கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கழக பொதுசெயலாளர் அண்ணன் துரைமுருகன் மற்றும் தளபதி கழக நிர்வாகிகளுக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் இக்கூட்டத்தின் வாயிலாக நன்றிகளை தெரிவித்துக்கொண்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்டி.ஜெ.கோவிந்தராஜன், கழக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் இ.ஏ.பி.சிவாஜி, தொகுதி பார்வையாளர்கள் தமிழ் க.அமுதரசன், அழகிரி சதாசிவம், மாநில நிர்வாகிகள் சி.எச்.சேகர், கே.ஜி.பாஸ்கர் சுந்தரம், வெ.அன்பு வாணன், ஜி.ஸ்டாலின், ஏ.ஆர்.டி.உதய சூரியன், ஏ.கே.சுரேஷ் உள்பட மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் தலைவர்கள் துணைத் தலைவர்கள் துணை அமைப்பாளர்கள் வார்டு கழக செயலாளர்கள் கிளைக் கழகச் செயலாளர்கள் முன்னாள் இந்நாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கழக மூத்த முன்னோடிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் கூட்டம் முடிவில் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு.தமிழ் உதயன் நன்றி கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here