ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் 33 வது கல்லூரி தின விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இனோவேஷன் மிஷன் இணை இயக்குநர் டாக்டர் இ.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்’
திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் 33 வது கல்லூரி தின விழா கல்லூரியின் முக்கிய அரங்கில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
இவ்விழாவில் கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு கல்லூரியின் கடந்தாண்டு சாதனைகளை நினைவு கூர்ந்தனர்
விழா காலை 10.00 மணிக்கு இறை வணக்கத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பாரம்பரிய மரபுப்படி குத்துவிளக்கு ஏற்றுதல் நடைபெற்றது. அதன் பின்னர் மாணவிகளின் வரவேற்பு நடனம் நிகழ்ச்சிக்கு சிறப்பூட்டியது
கல்லூரி முதல்வர் டாக்டர் பி.ஆர்.ரமேஷ் பாபு வரவேற்புரை வழங்கி, ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். அதில் கல்லூரியின் கல்விசார் முன்னேற்றம், ஆராய்ச்சி செயல்பாடுகள், மாணவர்களின் வேலைவாய்ப்பு சாதனைகள், மற்றும் கல்வி, விளையாட்டு, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் மாணவர்கள் பெற்றுள்ள வெற்றிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது
இவ்விழாவில் ஸ்ரீராம் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஆர்.நாராயணசாமி தலைமை உரையாற்றி, கல்வி வளர்ச்சியுடன் புதுமை சிந்தனையும் மாணவர்களுக்கு அவசியம் எனக் குறிப்பிட்டார்
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இனோவேஷன் மிஷன் (Tamil Nadu Startup and Innovation Mission) இணை இயக்குநர் டாக்டர் இ.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் புதுமை சிந்தனை மற்றும் தொழில் முனைவுத் திறனை வளர்த்துக்கொள்ள மாணவர்களை அவர் ஊக்குவித்தார்
விழாவின் முக்கிய நிகழ்வாக கல்வி, சயின்ஸ் எக்ஸ்போ, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் முழு ஏற்பாடுகளையும் இயந்திர பொறியியல் துறைத் தலைவர் டாக்டர் ஜி.சுகன்யா சிறப்பாக ஒருங்கிணைத்தார்














