தவறு செய்யும் திமுகவினரை அதிமுக ஆட்சி அமைத்ததும் புழல் சிறைக்கு அனுப்புவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சூளுரை:

0
106

அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தலைமையில் வடசென்னை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக பாக நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணி குறித்து ஆலோசனைக் கூட்டமானது ராயபுரத்தில் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் அதிமுக செங்கல்பட்டு மாவட்ட தொழில்நுட்ப அணி செயலாளர் காசி ராஜபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பாக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்

அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்:

ராயபுரம் தொகுதி என்பது தமிழகத்தில் மிகவும் முக்கியமான ஒரு தொகுதியாக விளங்குவதாகவும் அதிலும் குறிப்பாக ராயபுரம் குட்டி தமிழகமாக விளங்குகிறது எனவும் தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்று 25 ஆண்டு காலம் அதிமுகவின் கொடி பறந்த ஒரு தொகுதியாக இருந்ததாகவும் தற்பொழுது 2026 தேர்தலிலும் அதிமுக நிச்சயம் வெற்றி பெற்று தங்களது கொடியை பறக்க செய்வோம் என கூறினார்

மேலும் அதிமுக கட்சியை பொறுத்தவரை திட்டமிடுதல் மிகவும் முக்கியமான ஒன்றாக இருப்பதாகவும் அதில் தகவல் தொழில்நுட்ப அணியை தொடர்ந்து பலப்படுத்தி வருவதாகவும் ஜெயக்குமார் கூறியிருந்தார்

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக ஆட்சியில் விதவிதமான காய்ச்சல்கள் வருவதாகவும் ஆனால் மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் திமுக ஆட்சியில் மொத்தமாக தமிழகம் ஜீரோவில் இருக்கிறது

சட்ட ஒழுங்கு, சுகாதார சீர் குறைவு விலைவாசி ஏற்றம் போன்ற பிரச்சனைகள் உள்ளது எனவும் இவை அனைத்தையும் பாகம் வாரியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் அந்தக் கடமை அதிமுகவிற்கு உள்ளது

ஸ்டாலின் அரசாங்கம் 5 மதிப்பெண் கூட பெறாத ஒரு ஜீரோ அரசாங்கமாக விளங்குகிறது ஆனால் திமுக பலம் மிகுந்த கட்சியாக இருப்பதாக ஒரு பிரம்மையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்

கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒரு சதவீதம் கூட திமுக கொண்டு வரவில்லை வெட்டி விளம்பரம் மட்டும் செய்யும் விளம்பர மாடல் அரசாக ஸ்டாலின் அரசு செயல்பட்டு வருகிறது என கூறினார்.குறிப்பாக தேர்தலின் போது கள்ள ஓட்டு போட்டவரை பிடித்து கொடுக்கும்போது தன் மீது வழக்குகள் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்தனர், என் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளில் ஒவ்வொன்றாக தவிடு பொடி செய்து தற்போது ஒரு வழக்கு மட்டுமே நிலுவையில் உள்ளது

திமுக ஆட்சியில் ஏராளமான சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், தவறுகள் நடைபெற்று வருவதாகவும் தவறு நிச்சயம் அதிமுக ஆட்சி அமைத்ததும் புழல் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என கூறினார். (நிருபர் ..விக்னேஷ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here