கராத்தே Belt Test மற்றும் கோபுடோ ஆயுதப் பயிற்சி செமினார் திருவொற்றியூரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சி ;

0
80

கராத்தே Belt Test மற்றும் கோபுடோ ஆயுதப் பயிற்சி செமினார் திருவொற்றியூர்
உயேச்சி-ர்யூ கராத்தே டோ போஷுகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி
Uechi-Ryu Karate Do Boshukan Martial Arts Academy, மற்றும் சென்னை கிட்ஸ் இன்டர்நேஷனல் ப்ரீஸ்கூல் ( Chennai kidz international Pre school இணைந்து நடத்திய கராத்தே Belt Test மற்றும் கோபுடோ ஆயுதப் பயிற்சி செமினார் அக்டோபர் 5 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவொற்றியூர் சங்கராச்சார்யார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கராத்தே பட்டா தேர்வு, செமினார் மற்றும் ஆயுதப் பயிற்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

அத்துடன், பல மாணவர்கள் செமினாரின் போது நடைபெற்ற சண்டைப் போட்டிகளில் வெற்றி பெற்று சிறப்பான சாதனை புரிந்தனர்.

சிறப்பு விருந்தினர்கள்

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தவர்கள்:

திரு. சிவகுமார், துணை ஆய்வாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு), H-8 காவல் நிலையம்

திரு. முகம்மது ஆஷிக், மதராஸ் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்

திரு. பி. ஆர். பாரீத், நிர்வாக ஒருங்கிணைப்பாளர், சென்னை கிட்ஸ்

கியோஷி எம். கே. சிவகுமார், (7ஆம் டான் கருப்பு பட்டம்), உயேச்சி-ர்யூ இந்தியா தலைவர்

ரென்ஷி ஏ. எழில் அரசன், (6ஆம் டான் கருப்பு பட்டம்), சாஞ்சின் டோஜோ நிறுவனர்

இவர்கள் மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.

விழிப்புணர்வு உரைகள்

துணை ஆய்வாளர் திரு. சிவகுமார் அவர்கள், மொபைல் போன் அடிமைத்தனம், உடல் நலம் மற்றும் நல்ல பெற்றோர் வழிகாட்டுதலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.
மற்றொரு சிறப்பு விருந்தினர் திரு. பி. ஆர். பாரீத் அவர்கள், கல்வியின் அவசியம் மற்றும் மரியாதையின் மதிப்பு குறித்து மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கினார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்

மாஸ்டர் சி.வி. நிஷோக் – 5ஆம் டான் கருப்பு பட்டம்

மாஸ்டர் எஸ். ஏ. ஸ்ரீனிவாசன் – 4ஆம் டான் கருப்பு பட்டம்

மூத்த மாணவர்கள் அரவிந்த் ஷ்யாம், ஜே. பி. கிரிஸ்டோபர் மற்றும் பிற மாணவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

சிறந்த பயிற்சியாளர்

கராத்தே மாஸ்டர் சி.வி. நிஷோக் அவர்கள் மாணவர்களுக்கு கராத்தே, ஆயுதப் பயிற்சி மற்றும் ஜப்பானிய மொழி பயிற்சி வழங்கி, கல்வி மற்றும் சுயபாதுகாப்பில் முன்னேற்றம் அடைய வழிகாட்டி வருகிறார்.

அவர் மாணவர்களுக்கு வாழ்க்கை ஒழுக்கம், மரியாதை, மற்றும் நற்பண்புகளை கற்பித்து, அவர்களை கல்வியிலும் குணநலனிலும் சிறந்து விளங்கச் செய்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here