16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி — மத்திய அரசு அறிவிப்பு;

0
2147

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, வரும் 13-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது.

இதற்கிடையில், கொரோனா தடுப்பூசியை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் வினியோகப்பணிகளில் 2 நாட்கள் கால தாமதம் ஏற்பாட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி 13-ம் தேதி கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், வினியோகப்பணிகளில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி திட்டமிட்ட நாளை விட 2 நாட்கள் கழித்து அதாவது ஜனவரி 16-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

16-ம் தேதி கொரோனா தடுப்பூசி நாடு முழுவதும் போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. முதல்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here