.சென்னையில் தற்போது, 54 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ‘விமான நிலையம் – கிளாம்பாக்கம் வரையில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்’ என, 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்காக, விமான நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் பாதையை நீடிக்க திட்டமிடப்பட்டது.முடிவுஇதன்படி, விமான நிலையம் மற்றும் கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில், 15.5 கி.மீ., துாரத்திற்கு 4,080 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.















