ரோந்து பணிக்கு சென்ற காவலரை தாக்கிய போதை வாலிபர்கள் கைது;

0
190

R.K. நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பிரகாஷ் இவர் நேற்று முன்தினம் இரவு கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார் அப்பொழுது ஐந்து பேர் கொண்ட கும்பல் மது அருந்தி கொண்டிருந்தனர் இதை பார்த்து பிரகாஷ் இங்கு மது அருந்தக்கூடாது கலைந்து செல்லுங்கள் என்று கூறினார் அப்போது அவர்களுக்கும்  பிரகாசுக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டது ஐந்து பேரில் ஒரு வாலிபர் தன் கையில் வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் சாவியால் காவலர் பிரகாஷின் வலது கையில் குத்தி  காயப்படுத்தினார்   இதுகுறித்து பிரகாஷ் காவல் நிலையத்திற்கு தகவல்  கொடுத்ததன் பேரில்   குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த காவலர் பாஸ்கரை சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தார்  மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஐந்து  பேரையும்  கைது செய்தனர் காவல்நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில் வண்ணாரப்பேட்டை முத்தையா முதலி தெருவை சேர்ந்த சந்தோஷ் (21) பிரெசிடென்ஸ்சி கல்லூரியில் எம் ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தங்கவேல் பிள்ளை தோட்டத்தை சேர்ந்த சஞ்சய் (22) தனியார் வங்கியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கொருக்குப்பேட்டை ஏகப்பன் தெருவை சேர்ந்த பாலாஜி (23) மெக்கானிக்கை வேலை பார்த்து வருகிறார் கொடுங்கையூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த கார்த்திக் (25) ஏசி மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார் இவர்கள் ஐந்து  பேரையும்  கைது செய்து விசாரணை நடத்தியதில் காவலரை தாக்கியது உண்மை என்று தெரியவந்தது அதன்  பேரில்  ஐந்து பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். காவலரை தாக்கிய இச்சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here