மூலகொத்தளத்தில் மயான ஊழியர் அடித்து கொலையில் பெண் உள்பட 4 பேர் சிறை;

0
392

சென்னை வண்ணாரப்பேட்டை அடுத்த மூலகொத்தளம் ராமதாஸ் நகரை சேர்ந்தவர். ஜெகன்(எ) ஜெகன்நாதன் (45) மூலகொத்தளம் சுடுகாட்டில் மாநகராட்சி மயான ஊழியராக பணிபுரிந்து வந்தார் இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றார் தாய் இரண்டு மகள்களுடன் செங்குன்றம் கூனிமேடு பகுதியில் வசித்து வந்தார் குடிப்பழக்கம் இருப்பதால் பலரிடம் வட்டிக்கு பணம் வங்கி செலவு செய்து உள்ளார் அவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர் இதனால் கடந்த வாரம் லோன் வாங்கி ஒரு சிலருக்கு கொடுத்து உள்ளார் இதில் உடன் வேலை பார்த்த சசி வயது(42) வேலு வயது(38) ஆகியோருக்கு பணம் தரவில்லை இதனால் ஆட்டோவில் சென்று செங்குன்றத்தில் இருந்து ஜெகனை கடத்தி வந்து மூலகொத்தலத்தில் உள்ள வேலு வீட்டில் அடைத்து வைத்து பணம் கேட்டு அடித்து உள்ளனர் இதில் அடிதாங்காமல் ஜெகன் கதறவே விட்டு சென்றுள்ளனர் அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது ஜெகன் உயிரிழந்து விட்டார் இதுகுறித்து தகவல் அறிந்து வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் இதற்கு காரணமானவர்களை பிடிக்கவேண்டும் என்று உறவினர்கள் உடலை வாங்க மருத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதை அடுத்து மூலகொத்தளம் ராமதாஸ் நகரை சேர்ந்த சசி வயது (42) வடிவேல் வயது(30) சித்ரா வயது(27) 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வண்ணாரப்பேட்டை ஆய்வாளர் ரவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் மேலும் தலைமறைவாக உள்ள சத்தியா வேலு ஆகியோரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here