மீனவர் கொலை வழக்கில் 5 பேர் கைது; ஒருவர் தலைமறைவு’

0
338

சென்னை காசிமேடு கடற்கரையில் உடல் முழுவதும் வெட்டப்பட்டு உயிரிழந்து கிடந்த மீனவர் கொலை வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

திருவொற்றியூர் தாங்கள் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுடர்மணி மீனவரான இவர் கடந்த திங்கட்கிழமை இரவு வெட்டுக்காயங்களுடன் காசிமேடு கடற்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்

விசாரணையில் காசிமேடு கடற்கரையில் மது அருந்திக் கொண்டிருந்தபோது அங்கே வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சுடர்மணி சரமாரியாக வெட்டி தப்பி சென்றுள்ளனர் உடனிருந்தவர்கள் அளித்த அடையாளம் மற்றும் தகவலின்பேரில் புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த கமல்ராஜ் புதுமணைக்குப்பம் பகுதியை சேர்ந்த பசுபதி பவர் குப்பம் பகுதியை சேர்ந்த திலிப் மற்றும் சஞ்சய் தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுடர்மணியின் நண்பர் கொலைக் குற்றவாளியான எர்ணாவூர் சேர்ந்த திருப்பதி கமல்ராஜ் உடன் சண்டை இட்டதாகவும் அதில் சுடர்மணி தலையிட்டு திருப்பதிக் ஆதரவாக செயல்பட்டு எங்களை தாக்கியதில் ஆத்திரத்தில் இருந்த நாங்கள் சமயம் பார்த்து கொன்றுவிட்டதாக போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்

மேலும் இது குறித்து முன் விரோதம் காரணமாக இதுபோன்று கொலை சம்பவம் நடைபெற உள்ளதாக நுண்ணறிவு போலீசார் பல முறை எச்சரித்தும் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் நடவடிக்கை மேற்கொள்ளாததால் இந்த உயிரிழப்பு நடைபெற்றுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்படுகிறது

தப்பி ஓடிய சக்திவேல் என்ற செல்வம் என்ற 17 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here