சென்னை தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பு பகுதி மற்றும் நேதாஜி நகர் பகுதியைச் சார்ந்த இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நேற்று ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது இச்சம்பவம் தொடர்பாக இன்று 6 பேரை ஆர்கேநகர் போலீசார் கைது செய்துள்ளனர்
இதில் வெட்டு காயம்பட்ட பிரிட்டோ டேனியல் என்பவர் ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக ஆர்கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று ஆறு பேரை கைது செய்து நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில்
நாவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த சரவணன், சுரேந்தர், கிரிதரன், தனுஷ், தினேஷ்குமார், லோகேஷ், என்ற ஆறு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய பூச்சி வினோத் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்
















