பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு திடீர் உத்தரவு

0
259

தமிழகத்தில் அரசு பஸ்களும் கூட அதிகளவில் சாலை விபத்துக்களில் சிக்கி வருகின்றன. ஒரு சில டிரைவர்கள் குடி போதையிலும், செல்போனில் பேசிக்கொண்டும் பஸ்களை இயக்குவது இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.அரசு பஸ்களின் டிரைவர்கள் மட்டுமல்லாது, கண்டக்டர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. எனவே அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் உள்பட போக்குவரத்து பணியாளர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதை பின்பற்ற தவறுபவர்கள் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, அரசு பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் உள்பட போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் யாரும் மது அருந்தி விட்டு பணிக்கு வரக்கூடாது. அத்துடன் புகை பிடித்து விட்டும் பணியாளர்கள் பணிக்கு வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் வரும் காலங்களில் அரசு பஸ்கள் சாலை விபத்துக்களில் சிக்குவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
lஇந்த உத்தரவுகள் மூலமாக தமிழகத்தில் அரசு பஸ்கள் சாலை விபத்துக்களில் சிக்குவது கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பஸ்கள் சாலை விபத்தில் சிக்குவதால், உயிர் பலி ஏற்படுவதுடன், போக்குவரத்து கழகத்திற்கு பொருளாதாரரீதியில் நெருக்கடிகளும் ஏற்பட்டு வருகின்றன என்பது இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here