பனிரெண்டாம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது:

0
450

பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவியை வடசென்னையை சேர்ந்த இளைஞர் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ததால் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்

வடசென்னை தாங்கல் பகுதியில் வசித்துவருபவர் மதினா(40) கணவனை இழந்த இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்

இவருக்கு பாத்திமா( பெயர் மாற்றம் செய்யப்பட்டூள்ளது) பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார்

இந்த”நிலையில் பள்ளி மாணவி பாத்திமாவை சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சார்ந்த ஆண்டனி(19) என்ற இளைஞர் ஆசை வார்த்தை கூறி

தனது தாய் ஸ்டெல்லா மற்றும் தனது சித்தி முன்னிலையில் வீட்டிலேயே திருமணம் செய்துள்ளார்

இந்நிலையில் மாணவியை காணவில்லை என மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில்

போலிசார் ஆண்டனியை கைது செய்துள்ளனர்

பரிசோதனையில் மாணவியை இளைஞர் பாலியல் வண்புணர்வு செய்தது கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்

இதற்கு உறுதுணையாக இருந்த ஆண்டனியின் தாய் ஸ்டெல்லா மற்றும் சித்தி இருவரையும் போலிசார் தேடிவருகின்றனர்

மீட்க பட்ட சிறுமி அரசு காப்பக்தில் ஒப்படைக்கப்பட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here