நலவாழ்வியல் சிந்தனைகள்;

0
330

*நலவாழ்வியல் சிந்தனைகள்*

செல்லும் பாதை சரியாக இருந்தால், வேகமாக அல்ல மெதுவாக சென்றாலும் இலக்கை அடையலாம்.

ஆழ்ந்த உறக்கத்தில் ஆணவம், அகங்காரம், நான் என்ற மமதை, ஆசைகள், எண்ணங்கள்  அனைத்தும் கைவிடப்படுகிறது. இதனையே விழிப்பு நிலையில் செய்ய முடிந்தால் நீ உன்னை அறியலாம்.

ஒரு சிறிய கல் போதும் தடுக்கி விழ ,ஆனால் பெரிய கல் வேண்டும் ஒருபடி மேலே ஏறுவதற்கு.
அது போல, சிறிய சிறிய  துன்பங்களை கண்டு வருத்தப் படாமல் அதனால் நமக்கு.நன்மையே விளையும் என நினைத்து  நம் குறிக்கோளை அடைவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். எல்லாவற்றிலும் நன்மை உள்ளது.

நீங்கள் எந்த விஷயத்தை கஷ்டபட்டு அடைந்தீர்களோ  அதுவே உங்களுக்கு மகிழ்ச்சி தரும், கஷ்டபடாமல் கிடைத்த எல்லாம் உங்களுடன் வருவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் உங்களுக்கு அதன் மதிப்பு தெரியாது.
எப்பொழுதும்  ஒருவரின் அல்லது ஒன்றின் மதிப்பு தெரிந்து ஏற்க வேண்டும்.  எதையும் இவர் தானே, இது தானே என நினைக்க வேண்டாம்.  மதிப்பு என்பது மனதில் போடும் அளவல்ல.

*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*
*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*

*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here