திருவொற்றியூர் போக்குவரத்து காவல் துறை மற்றும் திருவொற்றியூர் பொது வர்த்தக சங்கம் இணைந்து வியாபாரிகளுக்கும் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் கொரோனா விழிப்புணர்வு கூட்டம்;

0
351

திருவொற்றியூர் போக்குவரத்து காவல் துறை மற்றும் திருவொற்றியூர் பொது வர்த்தக சங்கம் இணைந்து வியாபாரிகளுக்கும் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கும் கொரோனா விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

திருவொற்றியூர் மேற்கு மாட வீதியில் அமைந்துள்ள வன்னியர் திருமண மண்டபத்தில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் ஆணைப்படி போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் துரை அறிவுறுத்தல் பேரில் திருவொற்றியூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கே.வி.கணேஷ்பாபு தலைமையில் திருவொற்றியூர் பொது வர்த்தக சங்க பொது செயலாளர் இரா.முருகேசன் முன்னிலையில் வாடகை வாகன ஓட்டுனர்கள், வியாபாரிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொரோனா வைரஸின் 2வது அலையால் பாதிக்காமல் இருப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது*

இந்நிகழ்ச்சிக்கு போக்குவரத்து உதவி ஆணையாளர் சக்திவேல் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு வியாபாரிகளுக்கும் வாகன ஓட்டுனர்களுக்கும் கொரானா விதிமுறைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்று கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத பொதுமக்களால் சம்மந்தப்படாத வியாபாரிகள் அபராதம் கட்டுவதை தவிர்க்க முயற்சி செய்வதாக கூறினார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் காந்தி, ரைட்டர் தேவேந்திரன் திருவொற்றியூர் பொது வர்த்தக சங்கத்தின் ஜி.ஸ்டாலின், பி.வி.காசிராஜன், லாசர், ஆறுமுகம் நாராயணசிங் பாண்டிமுருகேசன் குமரேசன் இன்பராஜ் விவேகானந்தன் மற்றும் தயாளன் உட்பட வாடகை வாகன ஒட்டுனர்களுடன் ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here