தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – 670 பேருக்கு தொற்று;

0
253

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் இன்று 670 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,58,272 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,539 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று 527 பேர் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 8,41,250 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது 4,483 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here